தென்கொரியாவில் மேலும் 2,86,294 பேருக்கு கரோனா

தென் கொரியாவில் ஒமைக்ரான் வகை கரோனா தீவிரமாகப் பரவி வரும் நிலையில்,ஒருநாள் பாதிப்பு புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. 
தென்கொரியாவில் மேலும் 2,86,294 பேருக்கு கரோனா

தென் கொரியாவில் ஒமைக்ரான் வகை கரோனா தீவிரமாகப் பரவி வரும் நிலையில்,ஒருநாள் பாதிப்பு புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. 

தென் கொரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2,86,294 பேருக்கு தொற்று பதிவாகியுள்ளன. இதையடுத்து அந்நாட்டில் மொத்த பாதிப்பு 14,5,53,644 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதார அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர். 

இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது, 

நாட்டில் கரோனா பாதிப்பு வேகமெடுத்துள்ளது. புதிய பாதிப்புகளில் சியோலில் 52,430 பேருக்கும், ஜியோங்கி மாகாணத்தில் 76,899 பேருக்கும், மேற்கு துறைமுக நகரமான இன்சியானில் 14,844 பேருக்கு தொற்று பதிவாகியுள்ளது. தலைநகரம் அல்லாத உள்ளூர்ப் பகுதிகளில் 1,42,099 பேருக்கு தொற்று பரவியுள்ளது. 

ஒரேநாளில் 371 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு 18,033 ஆக உள்ளது. 

நாட்டில் இரண்டு டோஸ் கரோனா தடுப்பூசிகளைப் பெற்றவர்களின் எண்ணிக்கை 44,504,308 ஆக உள்ளது.  இது மொத்த மக்கள்தொகையில் 86.7 சதவீதம் ஆகும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com