இலங்கையை விட்டு வெளியேறினார் கோத்தபயவின் உறவினர் நிரூபமா ராஜபட்ச

கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக மூன்று நாடுகளிலிலிருக்கும் தூதரகங்களை தற்காலிகமாக மூட இலங்கை அரசு முடிவு செய்துளள்து.
இலங்கையை விட்டு வெளியேறினார் கோத்தபயவின் உறவினர் நிரூபமா ராஜபட்ச
இலங்கையை விட்டு வெளியேறினார் கோத்தபயவின் உறவினர் நிரூபமா ராஜபட்ச


இலங்கையில் ஏற்பட்டிருக்கும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு இடையே,  அதிபர் கோத்தபயவின் உறவினரும், முன்னாள் துணை அமைச்சருமான நிரூபமா ராஜபட்ச நாட்டை விட்டு வெளியேறினார்.

செவ்வாய்க்கிழமை இரவு 10.25 மணிக்கு, காட்டுநாயகே பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து துபை செல்லும் எமிரேட்ஸ் விமானத்தின் மூலம் அவர் இலங்கையை விட்டு புறப்பட்டதாக அந்நாட்டிலிருந்து வரும் செய்திகள் புகைப்படத்துடன் உறுதி செய்துள்ளன.

இலங்கையின் அதிபர் கோத்தபய ராஜபட்சவின் உறவினரும், 2010 முதல் 2015ஆம் ஆண்டு வரை இலங்கையின் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் துறையின் துணை அமைச்சராக நிரூபமா ராஜபட்ச பதவி வகித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com