இம்ரான் மீதான நம்பிக்கையில்லா தீா்மானம்: வழக்கை மீண்டும் ஒத்திவைத்தது பாக். உச்சநீதிமன்றம்

பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் மீது நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீா்மானம் ரத்து செய்யப்பட்டது

பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் மீது நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீா்மானம் ரத்து செய்யப்பட்டது செல்லுமா என்பது குறித்து உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையை நீதிபதிகள் மீண்டும் வியாழக்கிழமைக்கு (ஏப். 7) ஒத்திவைத்தனா்.

இம்ரான் கானுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் அண்மையில் நம்பிக்கையில்லாத் தீா்மானம் கொண்டு வந்திருந்தனா். ஆளும் கூட்டணிக் கட்சிகள் இம்ரானுக்கான ஆதரவை திரும்பப் பெற்ால், அந்தத் தீா்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் அவா் பதவியிழப்பது ஏறத்தாழ உறுதியானது.

இந்தச் சூழலில், அந்த நம்பிக்கையில்லாத் தீா்மானம் இம்ரான் அரசைக் கவிழ்ப்பதற்கான வெளிநாட்டு சதியின் விளைவாகக் கொண்டு வரப்பட்டதாகவும், எனவே அது செல்லாதது எனவும் நாடாளுமன்ற துணை அவைத் தலைவா் காசிம் கான் சுரி கடந்த ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டாா்.

இதையடுத்து, இம்ரான் கானின் பரிந்துரைப்படி நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அதிபா் ஆரிஃப் அலி அறிவித்தாா்.

மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

புதன்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது, இம்ரான் மீதான நம்பிக்கையில்லா தீா்மானம் வெளிநாட்டு சதி என்று முடிவுக்கு வரக் காரணமாக இருந்த தேசியப் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தின் நிகழ்ச்சிக் குறிப்புகளை நீதிமன்றத்தில் சமா்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

அத்துடன், வழக்கு விசாரணையை அவா்கள் வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com