கோப்புப்படம்
கோப்புப்படம்

இஸ்ரேல் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி: 8 பேர் காயம்

இஸ்ரேலின் டெல் அவீவ் நகரில் மிகவும் பரபரப்பான தெருக்களில் வியாழக்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்தனர் மற்றும் 8 பேர் காயமடைந்தனர்.

இஸ்ரேலின் டெல் அவீவ் நகரின் மிகவும் பரபரப்பான தெருக்களில் வியாழக்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்தனர், 8 பேர் காயமடைந்தனர்.

இஸ்ரேலின் நாட்டின் டெல் ஆவீவ் நகரின் பல்வேறு இடங்களில் வியாழக்கிழமை இரவு மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகிலுள்ள இச்சிலோவ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அவர்களில் 2 பேர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதாக தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

போலீஸ் செய்தித் தொடர்பாளர் எலி லெவி கூறுகையில், துப்பாக்கிச்சூடு "பயங்கரவாத தாக்குதல்" என்றும், இது டெல் அவீவ் நகரின் மிகவும் பரபரப்பான தெருக்களின்  "பல இடங்களில்" நடந்தது என்று கூறினார்.

இதுகுறித்து பிரதமர் நஃப்தலி பென்னட் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இது மிகவும் கடினமான இரவு. துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், காயமடைந்தவர்கள் பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் "கொலைவெறி தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். பயங்கரவாதிகளுக்கு  மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ உதவியவர்களுக்கு சரியான தண்டனை வழங்கப்படும்," என்று அவர் கூறினார்.

பயங்கரவாதிகளை தேடும் பணியில் எல்லைப் போலீஸ் படையினர் உள்பட நூற்றுக்கணக்கான போலீசார் நகரம் முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 

டெல் அவீவ் நகர வாசிகள் "வீட்டில் இருங்கள், கதவைப் பூட்டி, தாழ்வாரத்தில் நிற்பதைத் தவிர்க்குமாறு" போலீஸ் செய்தித் தொடர்பாளர்  கேட்டுக்கொண்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com