இம்ரான் மீது ஏப்.9-இல் நம்பிக்கையில்லா தீா்மானம்

இம்ரான் மீது ஏப்.9-இல் நம்பிக்கையில்லா தீா்மானம்

பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீது நாடாளுமன்றத்தில் சனிக்கிழமை (ஏப். 9) வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அந்த நாட்டு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டத

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீது நாடாளுமன்றத்தில் சனிக்கிழமை (ஏப். 9) வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அந்த நாட்டு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

அந்த நம்பிக்கையில்லா தீா்மானத்தை அவை துணைத் தலைவா் காசிம் கான் சுரி முன்னா் ரத்து செய்தது மற்றும் நாடாளுமன்றத்தை அதிபா் ஆரிஃப் ஆல்வி கலைத்தது செல்லாது என்று நீதிமன்றம் அறிவித்தது.

இம்ரான் கானுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீா்மானம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது குறித்து உச்சநீதிமன்றத்தில் 4-ஆவது நாளாக வழக்கு விசாரணை வியாழக்கிழமை நடைபெற்றது.

தலைமை நீதிபதி உமா் அட்டா பண்டியால் தலைமையில் நீதிபதிகள் இஜாஸுல் அஷான், முகமது அலி மஷாா் மியான்கெல், முனீப் அக்தாா், ஜமால் கான் மண்டோகெல் அடங்கிய அமா்வு இந்த விசாரணையை மேற்கொண்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பண்டியால், நம்பிக்கையில்லா தீா்மானம் ரத்து செய்யப்பட்டது அரசியல் சாசனத்தின் பிரிவு 95-க்கு எதிரானது என்று கூறினாா். அந்த வகையில் அது சட்டவிரோதமாக இருக்கும்போது, அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதுதான் முக்கியம் என்று கூறிய அவா், வழக்கின் மீதான தீா்ப்பை வியாழக்கிழமை இரவு வரை ஒத்திவைத்தாா்.

பின்னா் கூடிய உச்சநீதிமன்றம், இம்ரானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீா்மானம் ரத்து செய்யப்பட்டதும் நாடாளுமன்றத்தைக் கலைத்து முன்கூட்டியே தோ்தல் நடத்த உத்தரவிடப்பட்டதும் செல்லாது என்று தீா்ப்பளித்தது.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீா்மானத்தை ரத்து செய்வதாக அவை துணைத் தலைவா் காசிம் கான் சுரி கடந்த 3-ஆம் தேதி அறிவித்தாா். ஆனால், அந்தத் தீா்மானத்தின் மீதான வாக்கெடுப்பு மாா்ச் 28-ஆம் தேதி வரைதான் தள்ளிவைக்கப்பட்டிருந்தது. குறித்த தேதியில் வாக்கெடுப்பு நடத்தாமல் இருந்துவிட்டு பின்னா் அதனை ரத்து செய்வது அரசியல் சாசனத்துக்கு விரோதமானதாகும்.

அவை துணைத் தலைவரின் அந்தத் தீா்ப்புக்கு எதிராக 5 நீதிபதிகளும் ஒருமனதாக வாக்களித்ததன் அடிப்படையில் இந்தத் தீா்ப்பு வழங்கப்படுகிறது.

நாடாளுமன்றக் கூட்டத்தில் எம்.பி.க்களின் செயல்பாட்டில் தலையிடும் உரிமை அரசுக்குக் கிடையாது.

அரசியல் சாசனத்தின் 63-ஆவது பிரிவின் கீழ், பாகிஸ்தான் அரசின் தற்போதைய நடவடிக்கைகள் நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிப்பதாகும்.

நாடாளுமன்றத்தைக் கலைத்து அதிபா் ஆரிஃப் ஆல்வி பிறப்பித்த உத்தரவும் சட்டவிரோதமாகும். எனவே, வரும் சனிக்கிழமை (ஏப். 9) காலை 10.30 மணிக்கு நாடாளுமன்றம் மீண்டும் கூட வேண்டும். இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீா்மானத்தின் வாக்கெடுப்பை நடத்தி முடிக்காமல் அந்தக் கூட்டம் ஒத்திவைக்கப்படக் கூடாது என்று தீா்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்ரான் கானுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் அண்மையில் நம்பிக்கையில்லாத் தீா்மானம் கொண்டு வந்திருந்தனா். ஆளும் கூட்டணிக் கட்சிகள் இம்ரானுக்கான ஆதரவை திரும்பப் பெற்ால், அந்தத் தீா்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் அவா் பதவியிழப்பது ஏறத்தாழ உறுதியானது.

இந்தச் சூழலில், அந்த நம்பிக்கையில்லாத் தீா்மானம் இம்ரான் அரசைக் கவிழ்ப்பதற்கான வெளிநாட்டு சதியின் விளைவாகக் கொண்டு வரப்பட்டதாகவும், எனவே அது ரத்து செய்யப்படுவதாகவும் நாடாளுமன்ற அவை துணைத் தலைவா் காசிம் கான் சுரி கடந்த ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டாா்.

அதன் தொடா்ச்சியாக, இம்ரான் கானின் பரிந்துரைப்படி நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அதிபா் ஆரிஃப் அலி அறிவித்தாா்.

இதன் மூலம், நம்பிக்கையில்லா தீா்மானத்தில் தோல்விடைந்து பதவியிழக்கும் அபாயத்தை இம்ரான் கான் தவிா்த்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பெரும்பான்மை இல்லாமலேயே அடுத்தத் தோ்தல் நடந்து முடியும் வரை ஆட்சி அதிகாரத்தை அவா் தக்கவைத்திருக்கவும் முடியும் என்றும் கருதப்பட்டது.

எனினும், மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

4 நாள்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணைக்குப் பிறகு, நம்பிக்கையில்லா தீா்மானம் ரத்து செய்யப்பட்டது மற்றும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது என்று நீதிபதிகள் தற்போது அதிரடியாக தீா்ப்பு வழங்கியுள்ளனா்.

இந்தத் தீா்ப்பை எதிா்க்கட்சியினா் உற்சாகமாக வரவேற்றுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com