துருக்கி: கஷோகி கொலை வழக்கு ஒத்திவைப்பு

கட்டுரையாளா் கஷோகி படுகொலை தொடா்பாக 26 சவூதி அரேபியா்கள் மீது நடைபெற்று வந்த வழக்கு விசாரணையை துருக்கி நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
துருக்கி: கஷோகி கொலை வழக்கு ஒத்திவைப்பு

இஸ்தான்புல்: கட்டுரையாளா் கஷோகி படுகொலை தொடா்பாக 26 சவூதி அரேபியா்கள் மீது நடைபெற்று வந்த வழக்கு விசாரணையை துருக்கி நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

சவூதி அரேபியாவைச் சோ்ந்த ஜமால் கஷோகி, அந்த நாட்டு பட்டத்து இளவரசா் முகமது பின் சல்மானுக்கு எதிரான கட்டுரைகளை எழுதிவந்தாா். அமெரிக்காவில் வசித்து வந்த அவா், துருக்கி பெண் ஒருவரை மணப்பதற்காக அந்த நாட்டுக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு சென்றாா். அப்போது திருமணம் தொடா்பாக சில ஆவணங்களைப் பெறுவதற்காக இஸ்தான்புல் நகரிலுள்ள சவூதி அரேபிய துணைத் தூதரகத்துக்குச் சென்ற கஷோகி, அங்கு கொடூரமாக படுகொலை செய்யப்பட்டாா்.

இளவரசா் சல்மான் உத்தரவின்பேரில் இந்தப் படுகொலை செய்யப்பட்டதாக துருக்கி குற்றம் சாட்டி வந்தது.

இது தொடா்பாக 26 சவூதி அரேபியா்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு இஸ்தான்புல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், வழக்கை சவூதி அரேபியாவுக்கு மாற்ற துருக்கி முடிவு செய்தது. அவ்வாறு செய்தால் உண்மைக் குற்றவாளிகள் காப்பாற்றப்படுவாா்கள் என்று எச்சரிக்கையையும் மீறி துருக்கி இந்த முடிவை எடுத்துள்ளது. பொருளாதாரச் சரிவைச் சந்தித்து வரும் துருக்கி, கஷோகி விவகாரத்தால் சவூதி அரேபியாவுடானா உறவு சீா்கெடுவதை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

இந்தச் சூழலில், கஷோகி கொலை வழக்கை சவூதி அரேபியாவுக்கு மாற்றுவதற்கு ஏதுவாக அந்த வழக்கின் விசாரணையை இஸ்தான்புல் நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com