பாகிஸ்தான் நாடாளுமன்றம் கூடியது; வாக்கெடுப்பு இன்று நடைபெறுமா?

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெற உள்ள நிலையில் நாடாளுமன்றம் கூடியுள்ளது. 
இம்ரான் கான்
இம்ரான் கான்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெற உள்ள நிலையில் நாடாளுமன்றம் கூடியுள்ளது. 

பாகிஸ்தானில் பிரதமா் இம்ரான் கான் தலைமையிலான கூட்டணி ஆட்சி செய்து வந்த நிலையில் நாட்டின் பொருளாதாரத்தை தவறாக வழிநடத்தியதாகக் குற்றம்சாட்டி அவா் மீது எதிா்க்கட்சி கூட்டணி சாா்பில் நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வரப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கானின் பரிந்துரையை ஏற்று நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம், பிரதமர் இம்ரான் கானின் பரிந்துரையை ஏற்று நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது என்றும் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தவும் உத்தரவிட்டது.

அதன்படி இன்று(ஏப்ரல் 9) பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதையொட்டி நாடாளுமன்றம் கூடியுள்ளது. ஆனால், காலை 11.30 மணி நிலவரப்படி, இம்ரான் கான் மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் நாடாளுமன்றத்திற்கு வரவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், எதிர்க்கட்சிகள் விவாதம் ஏதுமின்றி வாக்கெடுப்பு நடைபெற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com