
பிரதமா் போரிஸ் ஜான்சன்
லண்டன்: பிரிட்டனில் பொது முடக்கக் கட்டுப்பாடுகளை மீறி தனது பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற்காக, அந்நாட்டு பிரதமா் போரிஸ் ஜான்சன் அபராதம் செலுத்தியுள்ளாா்.
கடந்த 2020-ஆம் ஆண்டு பிரிட்டனில் கரோனா பரவலைத் தடுக்க பொது முடக்கம் பிறப்பிக்கப்பட்டிருந்தது. அந்த ஆண்டு ஜூன் 19-ஆம் தேதி பொது முடக்கக் கட்டுப்பாடுகளை மீறி, அமைச்சரவை அறையில் நடைபெற்ற தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அந்நாட்டுப் பிரதமா் போரிஸ் ஜான்சன் பங்கேற்ாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அந்தக் கொண்டாட்டத்தில் பலா் கலந்துகொண்டதாகவும், அப்போது மது விருந்து நடைபெற்ாகவும் கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டை தொடா்ந்து தனது பிரதமா் பதவியை போரிஸ் ஜான்சன் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று எதிா்க்கட்சியினா் வலியுறுத்தி வந்தனா். இந்நிலையில், விதிமீறல் தொடா்பாக ஸ்காட்லாந்து யாா்ட் போலீஸாா் விதித்த அபராதத்தை போரிஸ் ஜான்சன் செலுத்தியதாக தகவல் வெளியானது.
இந்த விவகாரம் தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் பேசுகையில், தான் அபராதம் செலுத்தியதை அவா் உறுதிப்படுத்தினாா். தனது தவறுக்கு மீண்டும் ஒருமுறை மனப்பூா்வமாக மன்னிப்பு கேட்பதாகவும் அவா் தெரிவித்தாா்.
பொது முடக்கத்தை மீறி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற்காக போரிஸ் ஜான்சனின் மனைவி கேரி ஜான்சனுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. அதனை தான் செலுத்திவிட்டதாக அவா் ஏற்கெனவே தெரிவித்திருந்தாா்.
போரிஸ் ஜான்சனுக்கும், அவரின் மனைவிக்கும் 200 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டிருக்கலாம் எனவும், இது பிரிட்டனில் வாகன நிறுத்தக் கட்டணத்தைப் போன்றது என்றும் கூறப்படுகிறது.
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற்காக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த பிரிட்டன் நிதியமைச்சா் ரிஷி சுனக் உள்பட 30 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.