ஷாங்காய் இந்திய தூதரகத்தில் சேவைகள் தற்காலிகமாக ரத்து

சீனாவின் ஷாங்காய் மாகாணத்தில் பல லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்திய தூதரகம் தனிநபர்களுக்கான சேவைகளை ரத்து செய்துள்ளது.
ஷாங்காய் இந்திய தூதரகத்தில் சேவைகள் தற்காலிகமாக ரத்து
ஷாங்காய் இந்திய தூதரகத்தில் சேவைகள் தற்காலிகமாக ரத்து

பெய்ஜிங்: சீனாவின் ஷாங்காய் மாகாணத்தில் பல லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்திய தூதரகம் தனிநபர்களுக்கான சேவைகளை ரத்து செய்துள்ளது.

இது குறித்து இந்திய தூதரகம் தெரிவித்திருப்பதாவது, கிழக்கு சீன மாகாணத்தைச் சேர்ந்த இந்திய குடிமக்கள், அவசரமாக தூதரகப் பணிகளை மேற்கொள்ள பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகத்தை அணுகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷாங்காய் மாகாணமே ஒட்டுமொத்தமாக முடக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதால், இந்திய தூதரை தொடர்பு கொள்ள முடியாது என்றும், தனிநபர் சேவையை செய்து தர இயலாது எனறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூதரக ஊழியர்களின் செல்லிடப்பேசி எண்கள் அளிக்கப்பட்டு, ஏதேனும் அவசர உதவிகளுக்கு தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா நெருக்கடி காரணமாக கடந்த 2 வாரங்களாக கடுமையான பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டிருந்த சீனாவின் ஷாங்காய் நகரில், செவ்வாய்க்கிழமை கட்டுப்பாடுகள் மிதமாக தளா்த்தப்பட்டன.

அங்கு கடுமையான உணவுப் பற்றாக்குறை நிலவுவதால் பொதுமக்கள் கடைகளை உடைத்து பொருள்களை எடுத்துச் செல்லும் காட்சிகளும் வீடுகளிலிருந்து கூச்சலிடும் காட்சிகளும் இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதையடுத்து குறிப்பிட்ட எண்ணிக்கையில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அனுமதிக்கப்படவுள்ளனா். மேலும், சில கடைகள் மற்றும் மருந்தகங்களை மீண்டும் திறக்கவும் அனுமதிக்கப்படவுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com