உக்ரைன் ராணுவத்தினர் 1,000 பேர் சரணடைந்தனர்: ரஷியா

ரஷியா-உக்ரைன் போரில் 1,000க்கும் மேற்பட்ட உக்ரைன் படையினர்  சரணடைந்துள்ளதாக ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ராணுவத்தினர் 1,000 பேர் சரணடைந்தனர்: ரஷியா

ரஷியா-உக்ரைன் போரில் 1,000க்கும் மேற்பட்ட உக்ரைன் படையினர்  சரணடைந்துள்ளதாக ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் ஒரு மாதத்தைக் கடந்து தொடர்ந்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு பகுதிகளை தாக்கி அழித்துள்ள ரஷியப்படை தரப்பிலும் மிகப்பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. 

முக்கியமாக உக்ரைனின் தலைநகர் கீவ் உள்ளிட்ட நகரங்களில் பொதுமக்கள் மீது ரஷியப்படை தாக்குதல் நடத்தியுள்ளது. கீவ் நகரில் இருந்து 1,000க்கும் மேற்பட்ட உடல்கள் கிடைத்துள்ளதாக உக்ரைன் தெரிவித்திருந்தது.

குறிப்பாக உக்ரைன் போரில் பலியான குழந்தைகளின் 
எண்ணிக்கை 186 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், உக்ரைனின் மரியுபோல் நகரில் 1,000க்கும் அதிகமான உக்ரைன் ராணுவத்தினர் ரஷியாவிடம் சரணடைந்ததாக ரஷியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மரியுபோலில் ஆயிரக்கணக்கான மக்களை ரஷிய ராணுவம் படுகொலை செய்ததாக உக்ரைன் அரசு குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com