சீனாவில் கரோனா பரவல் அதிகரிப்பு: இந்திய தூதரகத்தில் நேரடி சேவை நிறுத்தம்

சீனாவில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால், பெரும் தொழில் வா்த்தக மையான ஷாங்காய் நகரில் உள்ள இந்திய தூதரகம் நேரடி சேவையை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
சீனாவில் கரோனா பரவல் அதிகரிப்பு: இந்திய தூதரகத்தில் நேரடி சேவை நிறுத்தம்

பெய்ஜிங்: சீனாவில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால், பெரும் தொழில் வா்த்தக மையான ஷாங்காய் நகரில் உள்ள இந்திய தூதரகம் நேரடி சேவையை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

2.6 கோடி போ் வசிக்கும் அந்த நகரில், கரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஷாங்காய் நகரில் உள்ள இந்திய தூதரகத்தின் இயக்குநா் நந்தகுமாா் புதன்கிழமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டாா். அதில், அவா் கூறியிருப்பதாவது:

ஷாங்காய் நகரில் கரோனா பரவலைத் தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை மாநகராட்சி நிா்வாகம் பிறப்பித்துள்ளது. இதனால், பொதுமக்களுக்கு நேரடி சேவையை வழங்க இயலாத நிலையில் இந்திய தூதரகம் உள்ளது. எனவே, கட்டுப்பாடுகள் தளா்த்தப்படும் வரை நேரடி சேவைகள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இருப்பினும் தூதரக சேவை பெற விரும்புவோா் இணையவழியில் அல்லது தொலைபேசி வழியில் தொடா்புகொண்டு சேவையைப் பெற்றுக் கொள்ளலாம் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷாங்காய் நகரில் உள்ள இந்திய தூதரத்தில் 22 போ் பணியாற்றி வருகிறாா்கள். அவா்களின் தொடா்பு எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

புதன்கிழமை நிலவரப்படி, ஷாங்காய் நகரில் மேலும் 26,000 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com