மீண்டும் தலைதூக்குகிறதா கரோனா: ஆஸ்திரேலியாவிலும் அதிகரிப்பு

சீனா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் கரோனா பாதிப்பு அதிகரித்திருப்பது, மீண்டும் கரோனா தலைதூக்குகிறதோ என்று உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
மீண்டும் தலைதூக்குகிறதா கரோனா
மீண்டும் தலைதூக்குகிறதா கரோனா


கான்பெர்ரா; சீனா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் கரோனா பாதிப்பு அதிகரித்திருப்பது, மீண்டும் கரோனா தலைதூக்குகிறதோ என்று உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவில், வெள்ளிக்கிழமையன்று புதிதாக 40 ஆயிரம் பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், கரோனா பாதித்தவர்களில் 30 பேர் பலியாகியுள்ளனர். 

ஆஸ்திரேலியாவில் தற்போது 4,35,700 பேர் கரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளனர். இவர்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், 126 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

கடந்த ஒரு வாரமாக ஆஸ்திரேலியாவில் சராசரியாக 49 ஆயிரம் பேருக்கு கரோனா பாதித்திருப்பதாகவும், கரோனா பாதித்தவர்களின் சராசரி வயது 30 ஆகவும், பலியானவர்களின் சராசரி வயது 83 ஆகவும் உள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை அந்நாட்டில் 69 சதவீதம் பேர் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com