உக்ரைனில் 300 பேர் பிணைக்கைதிகளாக சிறைபிடிப்பு

உக்ரைனில் செர்னிஹிவ் நகருக்கு அருகே 300 பேர் ரஷிய படைகளால் பிணைக்கைதிகளாக சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ளனர். 
உக்ரைனில் 300 பேர் பிணைக்கைதிகளாக சிறைபிடிப்பு

உக்ரைனில் செர்னிஹிவ் நகருக்கு அருகே 300 பேர் ரஷிய படைகளால் பிணைக்கைதிகளாக சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ளனர். 

உக்ரைன் மீது ரஷியப் படைகள் கந்டத பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் தாக்குதல் நடத்தி வருகிறது. கிழக்கு உக்ரைனில் தங்களுக்கு ஆதரவான கிளிர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ் பகுதிகள் அடங்கிய டான்பால் பிராந்தியத்துக்குள் நுழைந்த ரஷியப் படையினர், அருகில் உள்ள மரியுபோல் நகரையும் முற்றுகையிட்டு கடந்த மார்ச் 2 ஆம் தேதி கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. 

மரியுபோலில் ரஷியப் படைகள் நடத்திய தாக்குதலில் 21 ஆயிரம் பொதுமக்கள் பலியானதாக அந்த நகர மேயர் வேடிம் பாய்சென்கோ கூறியானர். எனினும் இது உறுதியானது என்று சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன. சுமார் 3.4 லட்சம் பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். 

இதனிடையே 1,026 உக்ரான் வீரர்கள் ரஷியப் படையினரிடம் சரணடைந்துள்ளதாகவும், அவர்களில் 162 பேர் உயரதிகாரிகள், 47 பெண் வீரர்கள் என ரஷியா கூறியது. உக்ரைன் ராணுவம் இதுவரை உறுதிப்படுத்தவில்லை. 

இந்நிலையில், உக்ரைனில் செர்னிஹிவ் நகருக்கு அருகே உள்ள ஒரு பள்ளியின் அடித்தளத்தில் கிராம மக்கள் 300 பேரை 4 வாரங்களாக பிணைக்கைதிகளாக சிறைபிடித்து வைத்துள்ளனர் ரஷியப் படையினர்  என்று உக்ரைன் ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து உக்ரைன் ராணுவ அமைச்சகம் ட்விட்டரில் பக்க பதிவில், “செர்னிஹிவ் நகருக்கு அருகே யாஹிட்னே என்ற இடத்தில் கிராம மக்களை 300 பேரை ரஷியப் படையினர் பிணைக்கைதிகளாக சிறைபிடித்து வைத்துள்ளனர். 18 பேர் ரஷிய ஆக்கிரமிப்பின்போது கொல்லப்பட்டுள்ளனர்” என கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com