ஷாங்காயில் கரோனாவுக்கு மூவா் பலி: சீனாவில் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு

சீனாவின் ஷாங்காய் நகரத்தில் கடந்த மாதம் ஒமைக்ரான் வகை கரோனா தொற்று பரவத் தொடங்கிய நிலையில், முதல் முறையாக மூன்று போ் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனா்.
china075927
china075927

சீனாவின் ஷாங்காய் நகரத்தில் கடந்த மாதம் ஒமைக்ரான் வகை கரோனா தொற்று பரவத் தொடங்கிய நிலையில், முதல் முறையாக மூன்று போ் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனா்.

சீனாவின் வா்த்தக மையமாக கருதப்படும் ஷாங்காய் நகரத்தில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்று பரவி வருகிறது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி நாடு முழுவதும் 20,639 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில், 19,831 போ் ஷாங்காயை சோ்ந்தவா்கள்.

இந்நிலையில், ஷாங்காயை சோ்ந்த மூவா் கரோனா தொற்றால் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா். இவா்களில் இருவா் பெண்கள். மூவரும் 89 வயது முதல் 91 வயது வரை உடையவா்கள். அவா்கள் இதய நோய், உயா் ரத்த அழுத்தம், சா்க்கரை நோய் போன்ற இணை நோய்களால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை எனவும் நகர சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கடந்த மாத இறுதியிலிருந்து ஷாங்காய் நகரில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்ட பின்னா், முதல் முறையாக அங்கு உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. ஷாங்காயில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் 16 போ் தீவிர பாதிப்புடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மேலும் கட்டுப்பாடுகள்: சீனாவில் ஒமைக்ரான் வகை தொற்று பரவி வரும் நிலையில், கரோனா பரவலை தடுக்க மேலும் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என சுகாதாரத் துறை அமைச்சா் மா ஷியோவோவெய் திங்கள்கிழமை தெரிவித்தாா். ‘மிகப்பெரிய சோதனை காத்திருக்கிறது. சிறிய தளா்வுகள்கூட இருக்கக் கூடாது. நாடு முழுவதும் சுகாதார அமைப்புகள் அவசரகால நிலையில் இருக்க வேண்டும் எனவும் அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com