பிரான்ஸ் அதிபர் தேர்தல்: ஆட்சியை தக்க வைப்பாரா மேக்ரான்? வெற்றியை நிர்ணயிக்கும் இடதுசாரி சார்பு வாக்காளர்கள்

தொடக்கத்தில், இவர்கள் இருவருக்கும் போட்டி கடுமையாக இருந்தது. ஆனால், இறுதியில், வலதுசாரிகளின் விருப்ப வேட்பாளராக லே பெனே உருவெடுத்தார்.
விவாதத்தின்போது மேக்ரானும் லே பெனும்
விவாதத்தின்போது மேக்ரானும் லே பெனும்

பிரான்ஸ் அதிபர் தேர்தலானது இரண்டு சுற்றுகளாக நடைபெறகிறது. தகுதி வரம்பை பூர்த்தி செய்யும் யாராக இருந்தாலும் முதல்ல சுற்றில் போட்டியிட முடியும். இந்தாண்டு, முதல் சுற்றில் 12 வேட்பாளர்கள் களம் கண்டனர். முதல் சுற்றில் யாரும் பெரும்பான்மை பெறாத பட்சத்தில் அதிக வாக்குகள் பெறும் இரண்டு வேட்பாளர்கள் அடுத்த சுற்றில் போட்டியிடுவார்கள். 

இதுவரை நடைபெற்ற தேர்தல்களில், முதல் சுற்றில் எந்த ஒரு வேட்பாளரும் பெரும்பான்மை பெற்றதே இல்லை. கடந்த 2017ஆம் ஆண்டை போலவே, இந்த முறையும் மய்ய இடதுசாரியாக கருதப்படும் இமானுவல் மேக்ரான், தீவிர வலது சாரியாக கருதப்படும் மரைன் லே பென் ஆகியோர் இரண்டாவது சுற்றில் மோதுகிறார்கள். 

பிரான்ஸில் அதிபர் தேர்தல் இரண்டு சுற்றுகளாக நடத்தப்படுவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. பெரும்பான்மை மக்களின் ஆதரவை பெறுவது முதல் காரணமாக கருதப்படுகிறது. முதல் சுற்றில் பிடித்தவர்களுக்கும் இரண்டாவது சுற்றில் தந்திரமாக வாக்களிக்க வேண்டும் என்ற வகையிலும் தேர்தல் முறை வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த முறை, இந்த இரண்டு காரணங்களும் நிறைவேறவில்லை.

பழைய தேர்தல் முறையில் வலதுசாரி, இடதுசாரியை சேர்ந்த பல்வேறு கட்சிகள் போட்யிடும். இதன் அடிப்படையில் முதல் சுற்று நடத்தப்படுகிறது. முதல் சுற்றில் பிடித்தவர்களுக்கும் இரண்டாவது சுற்றில் கொள்கை பிரிவில் ஒரே அணியில் இருப்பவர்களுக்கும் மக்கள் வாக்களிப்பது வாடிக்கையான ஒன்றாக இருந்தது. பிரான்ஸில் தீவிர வலதுசாரிகள் மற்றும் மய்ய கொள்கையுடையவர்களின் வளர்ச்சிக்கு பிறகு இந்த முறை நிலைகுலைந்துவிட்டது. 

இந்தாண்டு, தீவிர வலதுசாரி கட்சியும் தீவிர இடதுசாரி கட்சியும் இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெறவில்லை. இந்த முறை, முதல் சுற்றிலிருந்தே தந்திரமாக வாக்களிக்க வேண்டிய கட்டாயத்திற்கு வாக்காளர்கள் தள்ளப்பட்டனர்.

இரண்டாவது சுற்றில் தீவிர வலதுசாரி வேட்பாளரான மரைன் லே பென், தீவிர இடதுசாரி வேட்பாளரான ஜீன் லூக் மெலன்சோன் ஆகியோருக்கிடையேயான போட்டியை தவிர்க்க முதல் சுற்றிலேயே மேக்ரானுக்கு வாக்களிக்க வேண்டிய கட்டாயத்திற்கு வலதுசாரி வாக்காளர்கள் தள்ளப்பட்டனர். இதன் காரணமாக, குடியரசு கட்சி வேட்பாளரான பெக்ரெஸ்ஸின் வாக்குகள் பெரிய அளவில் சரிந்தன.

இதனிடையே, இடதுசாரிகளுக்கிடையே நிலவிய ஒற்றுமையின்மையால் முதல் சுற்றில் போட்டியிட்ட ஆறு இடதுசாரி வேட்பாளர்களும் தோல்வியை தழுவினர். வலதுசாரிகளின் முக்கிய வேட்பாளராக மெலன்சோன் உருவெடுத்த நிலையில், அவருக்கு பின்னே இடதுசாரி வாக்களர்களை ஒருங்கிணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக, அவரின் வாக்குகள் 22 சதவிகிதத்தை எட்டியது. 

இன்னும் சில இடதுசாரி வாக்காளர்கள், முதல் சுற்றில் பிடித்த வேட்பாளருக்கு வாக்களிக்காமல் தந்திரமாக வாக்களித்திருந்தால், இரண்டாவது சுற்றுக்கு லே பெனுக்கு பதில் மெலன்சோன் தகுதி பெற்றிருப்பார்.

அதேபோல, மற்றொரு தீவிர வலதுசாரி வேட்பாளரான எரிக் ஜெம்மரின் வாக்குகளும் லே பெனுக்கு கிடைத்தது. தொடக்கத்தில், இவர்கள் இருவருக்கும் போட்டி கடுமையாக இருந்தது. ஆனால், இறுதியில், வலதுசாரிகளின் விருப்ப வேட்பாளராக லே பெனே உருவெடுத்தார்.

எனவே, வாக்காளர்கள் முதல் சுற்றிலேயே தந்திரமாக வாக்களித்திருப்பது தெரியவந்துள்ளது. ஆனால், பெரும்பான்மை மக்களின் ஆதரவை வேட்பாளர்கள் பெறவில்லையே என்ற கேள்வி எழுகிறது. இது உண்மை தான். ஆனால், இரண்டாவது சுற்றில் நேர்மறையை காட்டிலும் எதிர்மறைக்கு வாக்காளர்கள் வாக்களிக்க போவதுதான் தற்போதைய பிரச்னை. 

தேர்தல் முடிவுகளில், இதன் தாக்கம் குறைவாக இருந்தாலும் இதன் முக்கியத்துவம் என்பது வித்தியாசமாக இருக்க போகிறது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com