ஈஸ்டர் நாளில் குண்டுவெடிப்பின் பின்னணியை இலங்கை வெளிக்கொணர வேண்டும்: போப் பிரான்சிஸ்

தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலை தெரிவித்துக் கொண்ட போப் பிரான்சிஸ், தாக்குதலின் பின்னணியிலிருக்கும் உண்மையை வெளிக்கொணர வலியுறுத்தியுனார்
ஈஸ்டர் நாளில் குண்டுவெடிப்பின் பின்னணியை இலங்கை வெளிக்கொணர வேண்டும்: போப் பிரான்சிஸ்
ஈஸ்டர் நாளில் குண்டுவெடிப்பின் பின்னணியை இலங்கை வெளிக்கொணர வேண்டும்: போப் பிரான்சிஸ்

வாடிகன்: கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறன்று நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலை தெரிவித்துக் கொண்ட போப் பிரான்சிஸ், தாக்குதலின் பின்னணியிலிருக்கும் உண்மையை வெளிக்கொணர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளையில், இலங்கை தற்போது சந்தித்து வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியையும், அதன் வரலாற்றுக்கால அனுபவங்களைக் கொண்டு மீண்டு வர வேண்டிய பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

கொழும்பின் கர்தினால் மால்கம் ரஞ்சித் தலைமையில், 2019 பயங்கரவாத குண்டுவெடிப்புத் தாக்குதலில் பலியான மற்றும் உயிர் பிழைத்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் உள்பட இத்தாலியில் பணிபுரியும் சுமார் 3,500 இலங்கை கத்தோலிக்கர்கள் பங்கேற்ற கூட்டத்தில் உரையாற்றும் போது போப் பிரான்சிஸ் இவ்வாறு கூறினார்.

கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு பிரார்த்தனையின் போது நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதலில் 270 பேர் கொல்லப்பட்டனர். 45 வெளிநாட்டினர் உள்பட 500 பேர் காயமடைந்தனர். 3 தேவாலயங்கள், 3 நட்சத்திர விடுதிகள் தாக்குதலில் பலத்த சேதமடைந்தன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com