போலந்து, பல்கேரியா நாடுகளுக்கு சமையல் எரிவாயு விநியோகம் நிறுத்தம்: ரஷியா

போலந்து, பல்கேரியா ஆகிய நாடுகளுக்கு சமையல் எரிவாயு விநியோகம் நிறுத்தப்படுவதாக ரஷியா அறிவித்துள்ளது. 
ரஷிய அதிபர் புதின்
ரஷிய அதிபர் புதின்

போலந்து, பல்கேரியா ஆகிய நாடுகளுக்கு சமையல் எரிவாயு விநியோகம் நிறுத்தப்படுவதாக ரஷியா அறிவித்துள்ளது. 

உக்ரைன் மீதான ரஷியாவின் போர் இரண்டு மாதங்களைக் கடந்துள்ளது. பிற நாடுகளின் ராணுவ உதவியினால் உக்ரைனும் ரஷியாவுக்கு எதிராகப் போராடி வருகிறது. 

உக்ரைன் ஆதரவு நாடுகள் ரஷியாவின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன. 

இந்நிலையில், உக்ரைனின் அண்டை நாடுகளான போலந்து, பல்கேரியா ஆகிய நாடுகளுக்கு சமையல் எரிவாயு விநியோகம் நிறுத்தப்படுவதாக ரஷியா அறிவித்துள்ளது. 

ரஷியாவுடன் நட்பில் இல்லாத நாடுகளுக்கு சமையல் எரிவாயு ஏற்றுமதி நிறுத்தப்படும் என்று ரஷிய நாடாளுமன்ற கீழவைத் தலைவர் கூறியுள்ளார். 

உக்ரைனுக்கு ஆயுதங்கள் அளித்ததால் போலந்து, பல்கேரியா மீது ரஷியா இந்த நடவடிக்கை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. 

அதேநேரத்தில் இரு நாடுகளும் ரஷியாவின் நாணயமான ரூபிளில் பணம் செலுத்தாததால் சமையல் எரிவாயு விநியோகம் செய்யப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com