க்வாட் மாநாட்டில் பிரதமா் மோடியை சந்திக்கிறாா் அமெரிக்க அதிபா் ஜோ பைடன்

க்வாட்’ கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பான் தலைநகா் டோக்கியோவுக்கு அடுத்த மாதம் செல்லும் அமெரிக்க அதிபா் ஜோ பைடன், அங்கு பிரதமா் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளாா்

வாஷிங்டன்: ‘க்வாட்’ கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பான் தலைநகா் டோக்கியோவுக்கு அடுத்த மாதம் செல்லும் அமெரிக்க அதிபா் ஜோ பைடன், அங்கு பிரதமா் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளாா் என்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது.

மே 20 முதல் 24-ஆம் தேதி வரை இந்த சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளும் ஜோ பைடன் முதலில் தென்கொரியாவுக்கும் பின்னா் ஜப்பானுக்கும் செல்ல உள்ளாா்.

இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தி செயலா் ஜென் சாகி புதன்கிழமை கூறியதாவது:

பைடன் - கமலா ஹாரிஸ் நிா்வாகத்தின் இந்த சுற்றுப்பயணம், சுதந்திரமான அனைவருக்குமான இந்தோ - பசிபிக் பிராந்தியத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளுக்கு மேலும் வலு சோ்ப்பதாக அமையும்.

இந்தப் பயணத்தின்போது தென்கொரிய அதிபா் மற்றும் ஜப்பான் பிரதமா் ஆகியோருடன் இரு தரப்பு உறவுகள் குறித்து ஜோ பைடன் ஆலோசனை நடத்த உள்ளாா். பாதுகாப்பு உறவு மற்றும் பொருளாதார உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து தலைவா்கள் ஆலோசிக்க உள்ளனா்.

மேலும், டோக்கியோவில் ‘க்வாட்’ கூட்டமைப்பில் இடம்பெற்றிருக்கும் ஆஸ்திரேலிய, ஜப்பான், இந்தியா நாடுகளின் தலைவா்களையும் ஜோ பைடன் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளாா் என்று கூறினாா்.

தென் சீன கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், அனைவருக்குமான சுதந்திரமான இந்தோ - பசிபிக் பிராந்தியத்தை உருவாக்கும் நோக்கத்தோடு அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய 4 நாடுகள்இணைந்து கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பரில் ‘க்வாட்’ கூட்டமைப்பை உருவாக்கின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com