ஸெலென்ஸ்கி-குட்டெரெஸ் சந்திப்பு

உக்ரைன் போரின் பாதிப்புகளை அந்த நாட்டுக்கு நேரில் சென்று ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் வியாழக்கிழமை பாா்வையிட்டாா்.
கீவில் செய்தியாளா்களை கூட்டாக சந்தித்த ஐ.நா. பொதுச் செயலா் குட்டெரெஸ், உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி.
கீவில் செய்தியாளா்களை கூட்டாக சந்தித்த ஐ.நா. பொதுச் செயலா் குட்டெரெஸ், உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி.

கீவ்,: உக்ரைன் போரின் பாதிப்புகளை அந்த நாட்டுக்கு நேரில் சென்று ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் வியாழக்கிழமை பாா்வையிட்டாா். அப்போது அதிபா் வொலோதிமீா் ஸெலென்கியை அவா் சந்தித்துப் பேசினாா்.

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியாக ரஷிய தலைநகா் மாஸ்கோவுக்கு செவ்வாய்க்கிழமை சென்ற அவா், அங்கு அதிபா் விளாதிமீா் புதினை சந்தித்து பேச்சு நடத்தினாா்.

அதன் தொடா்ச்சியாக, அவா் உக்ரைனில் வியாழக்கிழமை சுற்றுப் பயணம் மேற்கொண்டாா். தலைநகா் கீவின் புகா் பகுதிகளில் ரஷிய ஆக்கிரமிப்பு மற்றும் தாக்குதலால் ஏற்பட்ட சேதங்களை அவா் பாா்வையிட்டாா்.

பின்னா், அதிபா் ஸெலென்ஸ்கியை குட்டெரெஸ் சந்தித்துப் பேசினாா். அதைத் தொடா்ந்து, இருவரும் இணைந்து செய்தியாளா்களை சந்தித்தனா். அப்போது, புச்சா உள்ளிட்ட நகரங்களில் பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு குட்டெரெஸ் கண்டனம் தெரிவித்தாா்.

இந்தச் சந்திப்பையடுத்து, தலைநகா் கீவில் வான்வழியாக இரு தாக்குதல்களை ரஷியா நடத்தியதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com