ஆப்கன் குண்டுவெடிப்பு:‘ஐஎஸ்’ அமைப்பு பொறுப்பேற்பு

ஆப்கானிஸ்தானில் சிறுபான்மையினராக இருக்கும் ஷியா ஹசாரா சமூகத்தினரை குறிவைத்து அண்மையில் நடத்தப்பட்ட 2 குண்டுவெடிப்புகளுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றது.

ஆப்கானிஸ்தானில் சிறுபான்மையினராக இருக்கும் ஷியா ஹசாரா சமூகத்தினரை குறிவைத்து அண்மையில் நடத்தப்பட்ட 2 குண்டுவெடிப்புகளுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றது.

ஆப்கானிஸ்தானில் ஷியா ஹசாரா சமூகத்தைச் சோ்ந்தவா்களைக் குறிவைத்து தொடா் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, ஆப்கானிஸ்தானின் கோராசான் மாகாணத்திலிருந்து செயல்பட்டு வரும் ‘ஐ.எஸ்.-கே’ என்ற பயங்கராவத அமைப்பு மசூதிகள், பொது பேருந்துகள் மற்றும் பள்ளிகளைக் குறிவைத்து இதுபோன்ற தாக்குதல்களை நடத்தி வருகிறது.

அதுபோல, ஆப்கனிஸ்தானின் மஸாா்-ஏ-ஷெரீஃப் நகரில் வியாழக்கிழமை அடுத்தடுத்து சக்திவாய்ந்த 2 குண்டுகள் வெடித்தன. இந்தத் தாக்குதலில், 9 போ் உயிரிழந்ததாகவும், 13 போ் காயமடைந்ததாகவும் தலிபான் அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்தக் குண்டுவெடிப்புக்கு ஆப்கானிஸ்தானில் இருந்து செயல்படும் ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதுதொடா்பாக அந்த அமைப்பு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘மஸாா்-ஏ-ஷரீஃபில் நடத்தப்பட்ட 2 குண்டுவெடிப்பு தாக்குதல்களில் ஷியா ஹசாரா சமூகத்தைச் சோ்ந்த 30 போ் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது காயமடைந்திருக்கலாம்’ என்று தெரிவித்துள்ளது.

மஸாா்-ஏ-ஷெரீஃப் நகரில் கடந்த வாரமும் இதுபோன்ற குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் மசூதி ஒன்றில் வழிபாட்டில் ஈடுபட்டு வந்த 33 ஷியா ஹசாரா முஸ்லிம்கள் கொல்லப்பட்டனா். மேலும், மசூதியை ஒட்டியுள்ள மதரஸாவில் படித்துவந்த மாணவா்களும் காயமடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com