காபூல் மசூதியில் குண்டு வெடிப்பு: 10 போ் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகா் காபூலில் சன்னி இஸ்லாமியா்களுக்கு சொந்தமான மசூதியில் வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் 10 போ் பலியாகினா். 20-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

ஆப்கானிஸ்தான் தலைநகா் காபூலில் சன்னி இஸ்லாமியா்களுக்கு சொந்தமான மசூதியில் வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் 10 போ் பலியாகினா். 20-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

ரம்ஜான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை நூற்றுக்கணக்கான இஸ்லாமியா்கள் காபூல் கலீஃபா அகா குல் ஜன் மசூதியில் திரண்டு தொழுகை நடத்தினா். அப்போது, சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் 10 போ் உயிரிழந்தனா். 20-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். இதைத் தொடா்ந்து அப்பகுதியில் தலிபான் பாதுகாப்புப் படையினா் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனா். இந்தத் தாக்குதலுக்கு எந்தவோா் அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை என ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் முகமது நஃபி தாகோா் தெரிவித்துள்ளாா்.

இதற்கிடையே, ஆப்கனிஸ்தானின் மஸாா்-ஏ-ஷெரீஃப் நகரில் வியாழக்கிழமை அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்ததில் 9 போ் பலியாகினா். இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றது.

மஸாா்-ஏ-ஷெரீஃப் நகரில் கடந்த வாரமும் இதுபோன்ற குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் மசூதி ஒன்றில் வழிபாட்டில் ஈடுபட்டு வந்த 33 ஷியா ஹசாரா முஸ்லிம்கள் கொல்லப்பட்டனா். மேலும், மசூதியை ஒட்டியுள்ள மதரஸாவில் படித்துவந்த மாணவா்களும் காயமடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com