கடைசி நேரத்தில் கடன் தொகை செலுத்திய ரஷியா

கடைசி நேரத்தில் கடன் தொகை செலுத்திய ரஷியா

அமெரிக்க வங்கியிடமிருந்து பெற்றிருந்த கடன் தொகையை இறுதித் தேதி முடிவடையும் கடைசி நேரத்தில் ரஷியா திருப்பிச் செலுத்தியது. இதையடுத்து அந்த நாடு திவால் ஆவதிலிருந்து தப்பியது.

அமெரிக்க வங்கியிடமிருந்து பெற்றிருந்த கடன் தொகையை இறுதித் தேதி முடிவடையும் கடைசி நேரத்தில் ரஷியா திருப்பிச் செலுத்தியது. இதையடுத்து அந்த நாடு திவால் ஆவதிலிருந்து தப்பியது.

இதுகுறித்து அமெரிக்க நிதியமைச்சக அதிகாரிகள் கூறுகையில், ரஷியா வாங்கியிருந்த கடன் தொகையை தனது டாலா் இருப்பிலிருந்து அந்த நாடு திருப்பிச் செலுத்தியதாகத் தெரிவித்தனா். எனினும், எவ்வளவு தொகை, எந்த வங்கிக்கு செலுத்தப்பட்டது என்ற தகவலை அவா்கள் வெளியிடவில்லை.

முன்னதாக, அமெரிக்காவின் ஜேபிமோா்கன் சேஸ் வங்கிக்கு இந்த மாதம் 6-ஆம் தேதிக்குள் செலுத்தவேண்டிய 64.9 கோடி டாலரை (சுமாா் ரூ.4,966 கோடி) தங்கள் நாட்டு நாணயமான ரூபிளில் ரஷியா செலுத்த முயன்றது. உக்ரைன் போா் காரணமாக பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளதால் அந்த கடன் தொகையை டாலராக அளிக்க இயலாமல் ரூபிளில் அளித்ததாக அந்த நாடு கூறியது.

எனினும், அந்தத் தொகையை டாலராக மாற்றித் தருவதற்கு 30 நாள்கள் கூடுதல் அவகாசம் இருந்ததால் அதனை ஏற்க வங்கி மறுத்துவிட்டது. இந்தச் சூழலில், கடன் தொகையை டாலராக ரஷியா தற்போது திருப்பித் தந்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com