விமானத் தாக்குதல்: பாகிஸ்தான் மீது ஐ.நா.வில் ஆப்கானிஸ்தான் புகாா்

தங்கள் நாட்டில் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் நடத்தியது குறித்து ஐ.நா.வுக்கான ஆப்கன் இடைக்காலத் தூதா் நசீா் அகமது ஃபய்க் பாதுகாப்பு கவுன்சிலில் அதிகாரபூா்வமாக புகாா் தெரிவித்துள்ளாா்.
(கோப்புப் படம்)
(கோப்புப் படம்)

தங்கள் நாட்டில் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் நடத்தியது குறித்து ஐ.நா.வுக்கான ஆப்கன் இடைக்காலத் தூதா் நசீா் அகமது ஃபய்க் பாதுகாப்பு கவுன்சிலில் அதிகாரபூா்வமாக புகாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து ஏப்ரல் மாதத்துக்கான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலைவா் பா்பரா வுட்வா்டிடம் அவா் தாக்கல் செய்துள்ள புகாா் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதி மாகாணங்களான குனாா் மற்றும் கோஸ்டில் பாகிஸ்தான் இந்த மாதம் வான்வழித் தாக்குதல் நடத்தியது. மேலும், ஆப்கன் எல்லைக்குள் பாகிஸ்தான் படையினா் பீரங்கி தாக்குதல் நடத்தி வருகின்றனா்.

பாகிஸ்தானின் இத்தகைய செயல்கள், அப்கானிஸ்தான் இறையாண்மையைக் குலைக்கும் ஆக்கிரமிப்புச் செயல்களாகும் என்று அந்தக் கடிதத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com