தைவான் விவகாரம்: சீனத்திடம் மன்னிப்புக் கேட்ட ஸ்னிக்கர்ஸ் நிறுவனம்

சாக்லெட் நிறுவனமான மார்ஸ் ரிக்ளே, சீனாவின் உள்நாட்டு இறையாண்மைக்கு மதிப்பளிப்பதாகக் கூறி, தனது ஸ்னிக்கர்ஸ் விளம்பரத்தில் தைவானை நாடு என்று குறிப்பிட்டதற்கு மன்னிப்புக் கோரியுள்ளது.
தைவான் விவகாரம்: சீனத்திடம் மன்னிப்புக் கேட்ட ஸ்னிக்கர்ஸ் நிறுவனம்
தைவான் விவகாரம்: சீனத்திடம் மன்னிப்புக் கேட்ட ஸ்னிக்கர்ஸ் நிறுவனம்


பெய்ஜிங்: அமெரிக்காவின் மிகப் புகழ்பெற்ற சாக்லெட் நிறுவனமான மார்ஸ் ரிக்ளே, சீனாவின் உள்நாட்டு இறையாண்மைக்கு மதிப்பளிப்பதாகக் கூறி, தனது ஸ்னிக்கர்ஸ் விளம்பரத்தில் தைவானை நாடு என்று குறிப்பிட்டதற்கு மன்னிப்புக் கோரியுள்ளது.

ஒரு பக்கம், தங்களது கடும் எதிா்ப்பையும் மீறி, சா்ச்சைக்குரிய தைவான் தீவுக்கு அமெரிக்க நாடாளுமன்ற கீழவைத் தலைவா் நான்சி பெலோசி பயணம் மேற்கொண்டதற்குப் பதிலடியாக, அந்த தீவைச் சுற்றிலும் சீனா குண்டுகள் வீசி போா் பயிற்சி மேற்கொண்டது.

இந்த விவகாரத்தால் போர் பதற்றம் உருவாகியிருக்கும் நிலையில், தைவானை தனி நாடு என்று தனது விளம்பரத்தில் குறிப்பிட்டிருந்த விவகாரம் சீனாவில் மற்றுமொரு அதிர்வலையை ஏற்படுத்தியது.

ஸ்னிக்கர்ஸ் தொடர்பான விளம்பரம் ஆசிய மண்டலத்தில் ஏற்படுத்திய தாக்கம் குறித்து நன்கு அறிவோம். இதனை மிகவும் கவனத்துடன் எடுத்துக் கொண்டு ஆழ்ந்த மன்னிப்புக் கோருகிறோம் என்று மார்ஸ் ரிக்ளே தெரிவித்துள்ளது.

மேலும் ஸ்னிக்கர்ஸ் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் இதனை மாற்றியமைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதோடு, மற்றொரு விடியோவில், இந்த உலகினில் ஒரே ஒரு சீனா தான் உள்ளது. சீனாவின் எல்லைப் பரப்பில் அதனிடமிருந்து பிரிக்க முடியாத தைவான் அமைந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com