வங்கதேச தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

வங்கதேசத்தில் ஊதிய உயர்வு கோரி ஒரு லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

வங்கதேசத்தில் ஊதிய உயர்வு கோரி ஒரு லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வங்கதேச நாட்டில் தேயிலை தோட்ட தொழிலை நம்பி மக்களின் வாழ்வாதாரம் உள்ளது. தேயிலை உற்பத்தி முதல் தோட்ட பராமரிப்பு வரையிலான பணிகளை மக்கள் மேற்கொண்டு வருகின்றனர். எனினும் அவர்களுக்கு நாளொன்றுக்கு இந்திய மதிப்பில் ரூ.100 மட்டுமே ஊதியமாகக் கிடைக்கிறது.

இந்நிலையில் தங்களது தினசரி ஊதியத்தை 150 சதவிகிதம் உயர்த்தி வழங்க வேண்டும் எனக்கோரி தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

உலக அளவில் வழங்கப்படும் மிகக்குறைந்த ஊதியம் இது எனத் தெரிவித்த தொழிலாளர்கள் இதனால் தங்களது அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கே சிரமத்தை சந்திப்பதாகத் தெரிவித்துள்ளனர். 

200க்கும் மேற்பட்ட தேயிலை  தயாரிப்பு நிறுவனத்திலிருந்து 1 லட்சத்து 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக வங்கதேச தேயிலை தொழிலாளர் சங்கத்தின் மூத்த நிர்வாகி சீதாராம் பின் தெரிவித்துள்ளார்.

தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தால் தேயிலை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com