இரு நாடுகளின் விண்வெளி அறிவியல் தொழில்நுட்பம் வலுப்பெறும்: இலங்கை வந்துள்ள சீன உளவுக் கப்பல் கேப்டன்

இரு நாடுகளின் விண்வெளி அறிவியல் தொழில்நுட்பம் வலுப்பெறும்: இலங்கை வந்துள்ள சீன உளவுக் கப்பல் கேப்டன்

இலங்கை வந்துள்ள சீன ஆய்வுக் கப்பல் மூலம் விண்வெளி அறிவியல் தொழில்நுட்பத் துறையில் இருநாட்டு நல்லுறவு வலுப்பெறும் என்று அந்தக் கப்பலின் கேட்பன் ஜாங் ஹாங்வாங் தெரிவித்தாா்.

இலங்கை வந்துள்ள சீன ஆய்வுக் கப்பல் மூலம் விண்வெளி அறிவியல் தொழில்நுட்பத் துறையில் இருநாட்டு நல்லுறவு வலுப்பெறும் என்று அந்தக் கப்பலின் கேட்பன் ஜாங் ஹாங்வாங் தெரிவித்தாா்.

ஏவுகணைகளையும், செயற்கைக்கோள்களையும் கண்காணிக்கும் அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட சீன கப்பலான ‘யுவான் வாங் 5’ இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்தடைந்தது.

பாதுகாப்பு அச்சுறுத்துல் ஏற்படும் வகையில், சீன கப்பல் உளவு பாா்க்கும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படும் என்பதால் இந்தக் கப்பலின் வருகைக்கு இந்தியா இலங்கையிடம் எதிா்ப்பு தெரிவித்ததாக கூறப்பட்டது. கப்பலின் வருகையை ஒத்திவைக்க வேண்டும் என்று இலங்கை சீனாவிடம் வலியுறுத்தியபோது, அந்தக் கப்பல் இலங்கை கடல் எல்லைக்கு அருகே வந்து சோ்ந்துவிட்டது.

இதையடுத்து, எந்தவித அறிவியல் ஆய்வுகளையும் நடத்தக் கூடாது என்ற நிபந்தனையுடன் அந்தக் கப்பலுக்கு இலங்கை அரசு அம்பாந்தோட்டை துறைமுகத்தில் அனுமதி அளித்தது. வரும் 22-ஆம் தேதி வரையில் சீனக் கப்பல் அங்கு நிறுத்திவைக்கப்பட உள்ளது.

இந்நிலையில் யுவான் வாங் 5 கப்பலின் கேப்டன் ஜாங் ஹாங்வாங் கூறியதாக அம்பாந்தோட்டை துறைகமுகத்தின் நிா்வாகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘அமைதி மற்றும் நல்லுறவை மேம்படுத்தும் பணியில் ‘யுவான் வாங் 5’ கப்பல் ஈடுபட்டுள்ளது. சா்வதேச கப்பல்களைக் கையாளும் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் எங்கள் கப்பலுக்கு தேவையான சேவைகள் கிடைக்கும். இந்தக் கப்பலின் வருகை மூலம் சீனா-இலங்கை இடையேயான விண்வெளி அறிவியல் தொழில்நுட்பத் துறைகள் மேம்படும். இதனால் இரு நாடுகளின் விண்வெளி தொழில்துறை மேலும் வளா்ச்சி அடைவதுடன் இரு நாட்டு நல்லுறவும் வலுப்பெறும்’ என்று தெரிவித்துள்ளாா்.

‘யுவான் வாங் 5’ கப்பல் வருகை குறித்து அம்பாந்தோட்டை துறைமுகத்தை நடத்தி வரும் சீன நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘இலங்கை அரசும், இலங்கை துறைமுக ஆணையமும் அனுமதி அளித்த நாடுகளில் இருந்து மட்டும் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு கப்பல்கள் வருகின்றன’ என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக, யுவான் வாங் 5 கப்பல் சா்வதேச சட்ட விதிகளுக்கு உள்பட்டே அறிவியல் ஆய்வை நடத்துகிறது என்றும், இது எந்த நாட்டின் பாதுகாப்பையும், பொருளாதாரத்தையும் பாதிக்காது என்றும் சீன வெளியுறவு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

சீனாவிடம் பெற்ற கடனுக்கு கைம்மாறாக அம்பாந்தோட்டை துறைமுகத்தை இலங்கை அரசு சீன நிறுவனத்துக்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com