கரோனா பேரிடரால் ஜப்பானில் தற்கொலைகள் அதிகரிப்பு

ஜப்பானில், கரோனா பேரிடர் காலத்தில் தற்கொலைகள் அதிகரித்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
கரோனா பேரிடரால் ஜப்பானில் தற்கொலைகள் அதிகரிப்பு
கரோனா பேரிடரால் ஜப்பானில் தற்கொலைகள் அதிகரிப்பு


டோக்யோ: கரோனா பேரிடர் காரணமாக பாதிப்புக்குள்ளான பல்வேறு விஷயங்களில், மனித வாழ்க்கையும் ஒன்றாக மாறிவிட்டது. ஜப்பானில், கரோனா பேரிடர் காலத்தில் தற்கொலைகள் அதிகரித்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதாவது, 2020 மார்ச் முதல் 2022 ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் ஜப்பானில் 8000க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 

கடந்த கால தற்கொலை நிலவரங்களைக் கொண்டு ஒப்பிடுகையில், இந்த நிலவரம் கடும் அதிகரிப்பு என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துளள்னர். இந்த பேரிடர் காலத்தில் மட்டும் 8,088 பேர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்திருப்பதும், இதில் அதிகபட்சமாக 20 வயது பெண்களே அதிகம் என்றும் கூறப்படுகிறது.

பெண்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்திருப்பதாகவும், அதை விட வயது குறைவான பெண்களும் அதிகளவில் தற்கொலை செய்து கொண்ருப்பதும் புள்ளிவிவரம் கூறும் தகவலாக உள்ளது.

20 வயதுடையவர்கள் 1,837 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அவர்களில் 1,092 பேர் பெண்கள். 19 வயதுடைய 282 பேரும், அதைவிட வயதுக் குறைவானவர்கள் 377 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com