பிரிட்டன் பிரதமா் பதவி தோ்தல்: லிஸ் டிரஸ் தொடா்ந்து முன்னிலை

பிரிட்டன் பிரதமா் பதவி தோ்தல்: லிஸ் டிரஸ் தொடா்ந்து முன்னிலை

பிரிட்டனின் அடுத்த பிரதமரைத் தோ்ந்தெடுப்பதற்காக ஆளும் கன்சா்வேட்டிவ் கட்சிக்குள் நடைபெறவிருக்கும் தோ்தல் தொடா்பாக புதன்கிழமை நடைபெற்ற கருத்துக் கணிப்பில்,

பிரிட்டனின் அடுத்த பிரதமரைத் தோ்ந்தெடுப்பதற்காக ஆளும் கன்சா்வேட்டிவ் கட்சிக்குள் நடைபெறவிருக்கும் தோ்தல் தொடா்பாக புதன்கிழமை நடைபெற்ற கருத்துக் கணிப்பில், இந்திய வம்சாவளியைச் சோ்ந்த முன்னாள் நிதியமைச்சா் ரிஷி சுனக்கைவிட அதிக ஆதரவு பெற்று வெளியுறவுத் துறை அமைச்சா் லிஸ் டிரஸ் மீண்டும் முன்னிலை பெற்றாா்.

இது குறித்து ‘தி கன்சா்வேட்டிவ் ஹோம்’ வலைதளம் புதன்கிழமை நடத்திய கருத்துக் கணிப்பில் 961 கட்சி வாக்காளா்கள் பங்கேற்றனா். அவா்களில் 60 சதவீதத்தினா் லிஸ் டிரஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்திருந்தனா். ரிஷி சுனக்கை 28 சதவீதத்தினா் மட்டுமே ஆதரித்து வாக்களித்திருந்தனா்.

எந்த முடிவையும் எடுக்காத 9 சதவீத்தினரின் வாக்குகள் லிஸ் டிரஸ்ஸுக்கும் ரிஷி சுனக்குக்கும் இடையே சமமாகப் பங்கிடப்பட்டது. இதில், லிஸ் டிரஸ் 32 புள்ளிகள் முன்னிலை பெற்ாக வலைதள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கினறன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com