ஐரோப்பாவை பந்தாடும் புயல், 12 பேர் பலியான பரிதாபம்

ஐரோப்பாவில் வீசி வரும் கடுமையான புயலினால் இதுவரை 12 பேர் பலியாகியுள்ளனர். இதனையடுத்து, ஜெர்மனிக்கு அதிகனழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

ஐரோப்பாவில் வீசி வரும் கடுமையான புயலினால் இதுவரை 12 பேர் பலியாகியுள்ளனர். இதனையடுத்து, ஜெர்மனிக்கு அதிகனழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரியாவில் வீசிய பலத்தக் காற்றினால் மரம் சாய்ந்ததில் 4 மற்றும் 8 வயதுடைய இரண்டு சிறுமிகள் பலியாகினர். 

இந்த புயல் குறித்து அதிகாரிகள் கூறியதாவது: “புயலினால் 13 பேர் காயமடைந்துள்ளனர். அதில், இருவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. புயலினால் பாதிக்கப்பட்டவர்களில் பலர் சுற்றுலாவிற்காக வருகை புரிந்தவர்கள் ஆவர்.” என்றனர்.

இரு சிறுமிகளின் இறப்பு குறித்து ஆஸ்திரிய அதிபர் அலெக்ஸாண்டர் வான் டர் பெல்லன் கூறியதாவது: “ இரு சிறுமிகளின் மறைவு மிகுந்த துயரத்தை கொடுத்துள்ளது. ஆஸ்திரியாவின் பல பகுதிகள் போர்க்களம் போன்று காட்சியளிக்கின்றன.” என்றார்.

அதேபோல ஆஸ்திரியாவில் மரத்தில் மின்னல் தாக்கி மரம் முறிந்து விழுந்ததில் 3 பெண்கள் பலியாகினர்.

ஐரோப்பாவின் பல நாடுகளும் புயலின் பிடியில் சிக்கித் தவித்து வருகின்றன. அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக மீட்புப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com