"புதினின் மூளை" என்று அழைக்கப்படும் ராணுவ ஆலோசகர் மகள் கார் குண்டு வெடிப்பில் பலி

ரஷிய அதிபர் புதினுக்கு நெருக்கமானவரும், ரஷிய சித்தாந்தவாதியான அலெக்சாண்டர் டுகினின் மகள் டாரியா டுகினா மாஸ்கோவின் புறநகர் பகுதியில் கார் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டதாக அதிகாரிகள்தெரிவித்தனர்.
"புதினின் மூளை" என்று அழைக்கப்படும் ராணுவ ஆலோசகர் மகள் கார் குண்டு வெடிப்பில் பலி

மாஸ்கோ: ரஷிய அதிபர் புதினுக்கு நெருக்கமானவரும், ரஷிய சித்தாந்தவாதியான அலெக்சாண்டர் டுகினின் மகள் டாரியா டுகினா மாஸ்கோவின் புறநகர் பகுதியில் கார் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

இதுகுறித்து ரஷிய விசாரணைக் குழு கூறுவதாவது:  அலெக்சாண்டர் டுகின் பயணம் செய்ய வேண்டிய காரில் கடைசி நேரத்தில் அவரது மகள் டாரியா டுகினா பயணம் செய்துள்ளார். இந்நிலையில், மாஸ்கோவின் புறநகர் பகுதியான 40 கி.மீ தொலைவில் உள்ள போல்ஷி வைசியோமி கிராமத்திற்கு அருகே நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த போது தனது டொயோட்டா லேண்ட் க்ரூஸர் காரில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து சிதறியதில் டாரியா டுகினா பலியானதாக விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.

டாரியா டுகினா 1992 ஆம் ஆண்டு பிறந்தவர். 

டாரியா டுகினா கார் குண்டு வெடிப்பில் பலியானது குறித்து விசாரணை நடத்த புதின் உத்தரவிட்டுள்ளார். 

டாரியா டுகினாவின் பலி ரஷியாவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், டுகினாவின் கார் குண்டு வெடிப்புக்கு உக்ரைன் தான் காரணம் என ரஷியா குற்றம்சாட்டியுள்ளது. 

புதின் மூளையாகவும், உக்ரைன் மீதான ரஷிய நடவடிக்கைகளுக்கு பின்னால் அலெக்சாண்டர் டுகின் இருப்பதாக  கூறப்படுவதால் அவருக்கு பல நாடுகள் தடை விதித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com