அதிக மழை: மிஸ்ஸிஸிப்பியில் தண்ணீருக்குப் பஞ்சம்

அமெரிக்காவின் மிஸ்ஸிஸிப்பி மாகாணத்தில் அதிக மழைப்பொழிவு காரணமாக தண்ணீருக்குப் பஞ்சம் ஏற்பட்டுள்ளதால் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. 
அதிக மழை: மிஸ்ஸிஸிப்பியில் தண்ணீருக்குப் பஞ்சம்

அமெரிக்காவின் மிஸ்ஸிஸிப்பி மாகாணத்தில் அதிக மழைப்பொழிவு காரணமாக தண்ணீருக்குப் பஞ்சம் ஏற்பட்டுள்ளதால் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. 

அமெரிக்காவின் மிஸ்ஸிஸிப்பி மாகாணத்தில் கடந்த சில நாள்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. அதிக மழைப்பொழிவு காரணமாக அங்குள்ள நீர் சுத்திகரிப்பு ஆலைகளின் செயல்பாடு பாதிக்கப்பட்டுள்ளது. ஜாக்சன் பகுதியில் உள்ள இரண்டு முக்கிய நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 

இதனால் மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, மாகாணத்தில் அவசரநிலை பிரகடனம் செய்யப்படுவதாக மாகாண ஆளுநர் டேட் ரீவ்ஸ் அறிவித்துள்ளார். 

மிஸ்ஸிஸிப்பியில் 1.5 லட்சம் குடியிருப்பாளர்கள் உள்ள நிலையில் குடிநீர் மற்றும் இதரப் பயன்பாட்டுக்கான தண்ணீர் விநியோகம் தற்போது தொடங்கியுள்ளதாகவும் மக்கள் இந்த நிலையை தீவிரமாக எடுத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

'இபோது இருக்கும் தண்ணீர் குடிப்பதற்கு பாதுகாப்பானது அல்ல, பல் துலக்குவதற்குக்கூட பாதுகாப்பானது அல்ல. ஏனென்றால் அதில் போதுமான குளோரினேஷன் இல்லை மற்றும் தண்ணீரில் உள்ள கிருமி நீக்கப்படவில்லை' என்று தெரிவித்துள்ள மாகாண சுகாதாரத்துறை அதிகாரி விரைவில் நிலைமையை சரிசெய்வோம் என்று தெரிவித்துள்ளார். 

கனமழையால் ஜாக்சன் பகுதியில் சுமார் 100 முதல் 150 கட்டிடங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதாக கணித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com