கோப்புப் படம்
கோப்புப் படம்

பாகிஸ்தான் சிறையில் ஆப்கானிஸ்தான் பெண்கள், குழந்தைகள்: இதுதான் காரணமா?

பாகிஸ்தானின் கராச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட உரிய ஆவணங்களின்றி  நுழைந்த ஆயிரத்துக்கும் அதிகமான ஆப்கானிஸ்தான் மக்களை பாகிஸ்தான் சிறைப்பிடித்துள்ளது.

பாகிஸ்தானின் கராச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட உரிய ஆவணங்களின்றி  நுழைந்த ஆயிரத்துக்கும் அதிகமான ஆப்கானிஸ்தான் மக்களை பாகிஸ்தான் சிறைப்பிடித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் குழந்தைகள் பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. பாகிஸ்தான் அரசின் இந்த கைது நடவடிக்கை தெற்கு ஆசியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் உள்ள சரியான புரிதலற்ற இருதரப்பு உறவினை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது. கைது செய்யப்பட்டுள்ள மக்கள் அனைவரும் மீண்டும் ஆப்கானிஸ்தானுக்கே அனுப்பப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் மீண்டும் ஆப்கானிஸ்தான் திரும்ப விரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பாகிஸ்தான் அரசு உரிய ஆவணங்களின்றி நாட்டினுள் நுழைபவர்களை கைது செய்வதை வழக்கமாக வைத்திருந்தாலும், கடந்த அக்டோபர் முதல் பாகிஸ்தானின் கைது நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஆப்கானிஸ்தானில் இருந்து உரிய ஆவணங்களின்றி உள்ளே நுழைந்தவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

 
இது குறித்து கராச்சியில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரக அதிகாரி கூறியதாவது: இந்த கைது நடவடிக்கைகள் தொடர்பாக பாகிஸ்தான் அரசுடனும், உள்ளூர் காவல்  துறை அதிகாரிகளுடனும் தொடர்ந்து பேசி வருகிறேன். ஆப்கானிஸ்தான் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக ஆப்கானிஸ்தானுக்கு திரும்ப விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 139 பெண்கள் மற்றும் 165 குழந்தைகள் கராச்சி சிறையில் அடைக்கப்பட்டிருக்கலாம் என பாகிஸ்தானின் மனித உரிமைகள் ஆணையத்தின் தரப்பில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com