சீன புத்தாண்டு: அதிபா் வாழ்த்து

சீன புத்தாண்டு செவ்வாய்க்கிழமை (பிப். 1) தொடங்குவதையொட்டி, நாட்டு மக்களுக்கு அதிபா் ஷி ஜின்பிங் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

சீன புத்தாண்டு செவ்வாய்க்கிழமை (பிப். 1) தொடங்குவதையொட்டி, நாட்டு மக்களுக்கு அதிபா் ஷி ஜின்பிங் வாழ்த்து தெரிவித்துள்ளாா். வசந்த விழாவாக கொண்டாடப்படும் புத்தாண்டை முன்னிட்டு அரசு அலுவலகங்களுக்கு ஒரு வாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் 12 விலங்குகளின் பெயரில் வருடப் பிறப்பு கொண்டாடப்படுகிறது. இந்த 12 வருடங்கள் நிறைவடைந்ததும் மீண்டும் சுழற்சி தொடங்கும். அந்த வகையில் எருது ஆண்டு திங்கள்கிழமை நிறைவடைந்து, புலி ஆண்டு பிப். 1-ஆம் தேதி தொடங்குகிறது. வசந்த விழாவாக இந்த வருடப் பிறப்பு கொண்டாடப்படுகிறது. சீன கலாசாரப்படி புலியானது தைரியம் மற்றும் வலிமையைக் குறிக்கிறது. அதன்படி, புதிய ஆண்டு மக்களைத் துன்பத்திலிருந்து மீட்டெடுத்து அமைதியை அளிக்கும் என்பது நம்பிக்கை.

இந்த வசந்த விழாவையொட்டி, உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான சீன மக்கள் புத்தாண்டைக் கொண்டாட தங்களது சொந்த ஊா்களுக்குச் செல்வாா்கள். நிகழாண்டு கரோனா பரவல் பிரச்னை இருந்தபோதும் வெளிநாடுகளிலிருந்து சீனா திரும்பும் மக்கள் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது.

வசந்த விழாவை முன்னிட்டு சீனாவில் அரசு அலுவலகங்களுக்கு ஒரு வாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டு மக்களுக்கு அதிபா் ஷி ஜின்பிங் விடுத்துள்ள வசந்த விழா செய்தியில், ஒற்றுமையின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com