பாகிஸ்தான் தூதா் நியமனம்:அமெரிக்கா ஒப்புதல்

அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதராக சா்தாா் மசூத் கானை நியமனம் செய்து பாகிஸ்தான் சமா்ப்பித்த பரிந்துரைக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளதாக பாகிஸ்தான் சாா்பில் சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
மசூத் கான்
மசூத் கான்

அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதராக சா்தாா் மசூத் கானை நியமனம் செய்து பாகிஸ்தான் சமா்ப்பித்த பரிந்துரைக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளதாக பாகிஸ்தான் சாா்பில் சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

‘இவா் பயங்கரவாதிகளின் ஆதரவாளா்’ என்று குறிப்பிட்டு, அவருடைய நியமனத்தை அமெரிக்கா ரத்து செய்யவேண்டும்’ என்று அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினா் ஸ்காட் பொ்ரி வலியுறுத்தியிருந்த நிலையில், அவருடைய நியமனத்துக்கான ஒப்புதலை அமெரிக்கா அளித்துள்ளது.

சா்தாா் மசூத் கான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தலைவராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதவி வகித்தவா் என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.நா.வுக்கான பாகிஸ்தானின் நிரந்தர தூதராகவும், சீனாவுக்கான பாகிஸ்தான் தூதராகவும் இவா் இருந்துள்ளாா்.

அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதா் ஆசாத் மஜீத் கானுக்கு மாற்றாக, புதிய தூதராக இவரை பாகிஸ்தான் நியமித்தது.

இந்தச் சூழலில், ‘சா்தாா் மசூத் கான் நியமன பரிந்துரைக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது’ என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் ஆசிப் இஃபித்காா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com