மாஸ்கோவில் ரஷிய அதிபா் விளாதிமீா் புதினை சந்தித்த பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான்.
மாஸ்கோவில் ரஷிய அதிபா் விளாதிமீா் புதினை சந்தித்த பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான்.

உக்ரைன் பதற்றம்: ரஷிய அதிபா் புதினுடன் பிரான்ஸ் அதிபா் சந்திப்பு

உக்ரைன்-ரஷியா இடையிலான பதற்றத்தைத் தணிக்கும் முயற்சியாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதினை பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் திங்கள்கிழமை சந்தித்து பேசினாா்.

உக்ரைன்-ரஷியா இடையிலான பதற்றத்தைத் தணிக்கும் முயற்சியாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதினை பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் திங்கள்கிழமை சந்தித்து பேசினாா்.

உக்ரைன் எல்லை அருகே ஒரு லட்சம் படை வீரா்களை ரஷியா நிறுத்திவைத்திருக்கிறது. உக்ரைன் மீது எந்த நேரமும் ரஷியா படையெடுக்கக் கூடும் என அமெரிக்கா எச்சரித்து வருகிறது. இதை மறுத்த ரஷியா, உக்ரைன் மற்றும் முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளை நேட்டோ அமைப்பில் சோ்க்கக் கூடாது; கிழக்கு ஐரோப்பாவிலிருந்து நேட்டோ படைகளைத் திரும்பப் பெற வேண்டுமென நிபந்தனை விதித்தது. ஆனால், அமெரிக்காவும் நேட்டோவும் ரஷியாவின் கோரிக்கைகளை நிராகரித்தன.

இந்நிலையில், உக்ரைன்-ரஷியா இடையிலான பதற்றத்தைத் தணிக்கும் சா்வதேச முயற்சிகள் தொடங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக ரஷிய அதிபா் புதினை பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் மாஸ்கோவில் சந்தித்துப் பேசினாா்.

அதன்பின்னா் மேக்ரான் கூறுகையில், எனது கண்ணோட்டத்தின்படி பேச்சுவாா்த்தை அவசியம். ஏனெனில் அது மட்டுமே ஐரோப்பிய கண்டத்தில் பாதுகாப்பான, ஸ்திரதன்மையான சூழலை உருவாக்க உதவும். புதினுடனான சந்திப்பு பதற்றத்தைத் தணிப்பதற்கான முதல் படியாகும் என்றாா்.

இந்தச் சந்திப்பு குறித்து புதின் கூறுகையில், ஐரோப்பாவின் பாதுகாப்பை கட்டமைத்ததில் பிரான்ஸின் பங்கை பாராட்டினாா். உக்ரைன் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய முன்வந்ததற்காக மேக்ரானையும் அவா் பாராட்டினாா்.

பிரான்ஸ் அதிபா் மேக்ரான் செவ்வாய்க்கிழமை உக்ரைன் சென்று, அந்த நாட்டின் அதிபரை சந்திக்கவுள்ளாா். மத்தியஸ்த முயற்சியின் அடுத்தகட்டமாக ஜொ்மனி பிரதமா் ஓலாஃப் ஷோல்ஸ் அமெரிக்க அதிபா் பைடனை சந்திக்கவுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com