
உலகம் முழுவதும் இதுவரை 421 கோடி பேருக்கு இரண்டு தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
உலகம் முழுக்க கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் கொவாக்ஸின் , கோவிஷீல்ட் , ஸ்புட்னிக் , போன்ற தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
குறிப்பாக ஒமைக்ரான் தொற்று பரவலுக்குப் பின் தடுப்பூசிகள் செலுத்தும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இரண்டு தவணையாக வழங்கப்படும் கரோனா தடுப்பூசிகளை உலகம் முழுவதும் இதுவரை 421 கோடி பேர் எடுத்துக்கொண்டிருப்பதாகவும் இது ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 54 சதவீதம் என தினசரி கரோனா அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
இதையும் படிக்க | மிசோரத்தில் ஒரேநாளில் 367 குழந்தைகள் கரோனாவுக்கு பாதிப்பு
மேலும், உலகம் முழுவதும் தற்போது வரை 1009 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இந்தியாவில் இதுவரை 170.87 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதில் 70.4 கோடி பேர் இரண்டு தவணை தடுப்பூசியையும் செலுத்தியுள்ளனர்.