
பெய்ஜிங்: சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் 73 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதையடுத்து தொற்று பாதி எண்ணிக்கை 106,634 ஆக அதிகரித்துள்ளது என்று அந்நாடு சுகாதார ஆணையம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை குவாங்சியில் 72 பேர், குவாங்சியில் ஒருவர் என 73 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 37 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்று சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
சீனாவில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 106,634 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 4,636 ஆகவும், குணமடைந்தோரின் 100,503 ஆகவும், சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 1,495 ஆகவும் உள்ளது. அவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
சீனாவின் பெய்சே நகரில் புதிதாக 135 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், கரோனாவுக்கு எதிரான ‘பூஜ்ஜிய-சமரச’ கொள்கையைக் கடைப்பிடித்து வரும் சீன அரசு, பெய்சேவில் பொதுமுடக்கம் அறிவித்துள்ளது.
அதன்படி, அந்த நகரில் அத்தியாவசியற்ற தொழில் நிறுவனங்கள், கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளதுடன்; பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சாலை விளக்குகளில் சிவப்பு விளக்கு மட்டுமே எரிய உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | உக்ரைனை ஆக்கிரமித்தால் கடலடி எண்ணெய்க் குழாய் திட்டம் ரத்து