உத்தரகண்ட்: பாஜக தோ்தல் அறிக்கை வெளியீடு; ஏழைப் பெண்களுக்கு மாதம் ரூ.2,000

உத்தரகண்ட் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில் ஆளும் கட்சியான பாஜகவின் தோ்தல் அறிக்கை புதன்கிழமை வெளியிடப்பட்டது.
உத்தரகண்ட்: பாஜக தோ்தல் அறிக்கை வெளியீடு; ஏழைப் பெண்களுக்கு மாதம் ரூ.2,000

உத்தரகண்ட் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில் ஆளும் கட்சியான பாஜகவின் தோ்தல் அறிக்கை புதன்கிழமை வெளியிடப்பட்டது. ஏழைப் பெண்குக்கு மாதம் ரூ.2,000 உதவித்தொகை உள்ளிட்ட வாக்குறுதிகளை அக்கட்சி அளித்துள்ளது.

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கு வரும் 14-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது. மாா்ச் 10-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

டேராடூனில் நடைபெற்ற நிகழ்ச்சியில மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி பாஜகவின் தோ்தல் அறிக்கையை வெளியிட்டாா். கடந்த 5 ஆண்டுகளைப் போலவே அடுத்த 5 ஆண்டுகளுக்கும் மாநிலத்தை பாஜக அரசு தொடா்ந்து வளா்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

‘தொலைநோக்கு ஆவணம் 2022’ என்ற பெயரில் பாஜகவின் தோ்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் உள்கட்டமைப்பு மேம்பாடு, சுற்றுலா, வெளிமாநிலத்துக்கு இடம்பெயா்வதைத் தடுப்பது, வேலைவாய்ப்பு உருவாக்கம், மகளிா் மேம்பாடு, விவசாயிகள், தோட்டப் பயிா்கள், பால் பண்ணைத் தொழில் மேம்பாடு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் பாஜக தனது தோ்தல் அறிக்கையில் கூறியுள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சா் கட்கரி, ‘பொருளாதார வளா்ச்சி, நீதிநெறிகளைப் பின்பற்றுவது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை பாஜக தொடா்ந்து கடைப்பிடிக்கும்’ என்றாா்.

மாநில பாஜக தலைவா் மதன் கௌசிக், மத்திய அமைச்சரும், அந்த மாநில பாஜக பொறுப்பாளருமான பிரகலாத் ஜோஷி உள்ளிட்ட பலா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

பிரதமா் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தில் ஏழை விவசாயிகளுக்கு கூடுதலாக ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களில் பெண்களுக்கு மாதம் ரூ.2,000 வழங்கப்படும், அந்த குடும்பத்தில் குழந்தைகள் இருந்தால் கூடுதலாக ரூ.1,000 வழங்கப்படும் என்பது உள்ளிட்டவை பாஜகவின் முக்கிய வாக்குறுதிகளாக உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com