ரகசிய ஆவணங்களை கிழித்து கழிவறைகளில் போட்ட டிரம்ப்...பகீர் பின்னணி

ரகசிய ஆவணங்களை பாதுகாக்கும் தேசிய ஆவணக் காப்பகம், அதிபராக பதவியில் இருந்தபோது முக்கிய ஆவணங்களை கிழித்து வெள்ளை மாளிகை கழிவறைகளில் போட்ட டிரம்ப் குறித்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி வகித்தபோது, பல முக்கிய, ரகசிய ஆவணங்களை கிழித்து வெள்ளை மாளிகையின் கழிவறைகளில் போட்டதாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, காகிதங்களாக இருந்த ஆவணங்களை வாயில் போட்டு மென்று சாப்பிட்டதாகவும் சிலவற்றை ப்ளோரிடாவுக்கு எடுத்து சென்றதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் அதிபராக பதவி வகிப்பவர்கள், சில விதிகளை பின்பற்றுவது அவசியம். ஆனால், அதை மீறுவதேயே வாடிக்கையாக கொண்டுள்ள டிரம்ப், குடியரசு கட்சி ஆதரவாளர்களை கவர இதையே வழிமுறையாகவும் வைத்துள்ளார்.

அதிபரின் முக்கிய ஆவணங்களை பாதுகாத்து சேகரித்து வைத்து கொள்வதுதான் தேசிய ஆவண காப்பகத்தின் பணியாக உள்ளது. அதிபராக பதவியில் இருந்தபோது முக்கிய ஆவணங்களை கிழித்து வெள்ளை மாளிகை கழிவறைகளில் போட்ட டிரம்ப் குறித்து விசாரணை நடத்த தேசிய ஆவண காப்பகம் திட்டமிட்டுள்ளது.

டிரம்பின் இந்த செயல் குறித்து விசாரணை நடத்த நீதித்துறையிடம் ஆவண காப்பகம் கோரிக்கை விடுத்ததாக புகழ்பெற்ற தி வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. 

தேர்தலில் தோல்வி அடைந்த பிறகு, பல ஆவணங்களை ப்ளோரிடாவில் உள்ள தனது பங்களாவுக்கு டிரம்ப் எடுத்த சென்றுள்ளார். 15 பொட்டிகளில் எடுத்த சென்ற ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அரசின் பதிவு அலுவலகம் திங்கள்கிழமை உறுதி செய்தது. 

வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னுக்கு எழுதப்பட்ட அதிகாரப்பூர்வ கடிதங்கள், அதிபர் பதவி காலம் முடிந்த பிறகு, ஒபாமா டிரம்புக்கு எழுதிய கடிதம் உள்ளிட்டவற்றை மீட்கப்பட்டுள்ளது. டிரம்ப் கிழித்து போட்ட சில ஆவணங்களை ஒட்டி வைத்ததுள்ளதாக ஆவண காப்பகம் கடந்த வாரம் தெரிவித்திருந்தது.

வாட்டர்கேட் சர்ச்சைக்கு பிறகு, 1978ஆம் ஆண்டில், கொண்டுவரப்பட்ட அதிபர் பதிவு சட்டத்தின் படி, இ மெயில், கடிதங்கள், மற்றும் பல பணி ஆவணங்களை தேசிய ஆவண காப்பகத்திடம் அதிபர் சமர்பிக்க வேண்டியது கட்டாயம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com