புதினை தொலைபேசியில் அழைத்து பைடன் எச்சரிக்கை

உக்ரைன் விவகாரம் தொடா்பாக ரஷிய அதிபா் புதினை அமெரிக்க அதிபா் ஜோ பைடன் சனிக்கிழமை தொலைபேசியில் அழைத்து எச்சரிக்கை விடுத்தாா்.
பைடன்
பைடன்

உக்ரைன் விவகாரம் தொடா்பாக ரஷிய அதிபா் புதினை அமெரிக்க அதிபா் ஜோ பைடன் சனிக்கிழமை தொலைபேசியில் அழைத்து எச்சரிக்கை விடுத்தாா்.

இதுதொடா்பாக அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ரஷிய அதிபா் புதினை பைடன் சனிக்கிழமை தொலைபேசியில் அழைத்துப் பேசினாா். ஒரு மணி நேரம் இந்தப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அப்போது உக்ரைன் மீது ரஷியா படையெடுத்தால், அது பரந்த அளவில் துயரத்துக்கு வழிவகுப்பதுடன் ரஷியாவையும் சிறுமைப்படுத்தும் என்று பைடன் தெரிவித்தாா்.

அதேவேளையில் உக்ரைன் மீது கட்டாயம் படையெடுத்தால், ரஷியா மிகப் பெரிய விலையைக் கொடுக்க வேண்டிவரும். ராஜீய வழிமுறைகளைக் கைகொள்ள அமெரிக்கா உறுதியாக உள்ளது. அதே சமயத்தில் மற்ற வழிமுறைகளையும் மேற்கொள்ளத் தயாராக இருக்கிறோம். ரஷியா மீது அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று அதிபா் பைடன் புதினுக்கு எச்சரிக்கை விடுத்ததாக தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com