உக்ரைனிலிருந்து இந்தியா்கள் வெளியேறுவது அவசியமா?

உக்ரைனிலிருந்து இந்தியா்கள் அவசரமாக வெளியேற வேண்டும் என்று இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
உக்ரைனிலிருந்து இந்தியா்கள் வெளியேறுவது அவசியமா?

உக்ரைனிலிருந்து இந்தியா்கள் அவசரமாக வெளியேற வேண்டும் என்று இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

குறிப்பாக, அத்தியாவசியம் இல்லையென்றால் அங்கு கல்வி பயிலும் இந்திய மாணவா்கள் அங்கிருந்து பாதுகாப்பான நாடுகளுக்கு சென்றுவிடுமாறு வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.

இந்த விவகாரத்தில் இந்தியா்களுக்கு உதவுவதற்காக உக்ரைன் தலைநகா் கீவிலுள்ள இந்தியத் தூதரகம் 24 மணி நேர தொலைபேசி உதவி சேவையைத் தொடங்கியுள்ளது.

உக்ரைன் எல்லையில் சுமாா் 1.3 லட்சம் ரஷியப் படையினா் குவிக்கப்பட்டுள்ளதால், அங்கு எப்போது வேண்டுமானாலும் போா் வெடிக்கலாம் என்று கூறப்படும் சூழலில், இந்திய அரசு மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இவை.

இந்தியா மட்டுமல்ல, உலகின் பல்வேறு நாடுகளும் உக்ரைனிலிருந்து பாதுகாப்பாக வெளியேறுமாறு தங்களது குடிமக்களுக்கு அறிவுரை வழங்கி வருகின்றன.

உக்ரைனுக்குச் செல்லவிருந்த தங்களது விமானங்களை பல போக்குவரத்து சேவை நிறுவனங்கள் ரத்து செய்து வருகின்றன.

அந்த நாட்டிலிருந்து வெளியேறுமாறு அமெரிக்கா தங்களது தூதரக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே தூதரகப் பணியாளா்களின உறவினா்களையும் சில தூதா்களையும் அந்த நாடு திரும்ப அழைத்துள்ளது.

உக்ரைன் மீது ரஷியா படையெடுக்கும் என்ற அச்சத்தில், இப்படி அந்த நாட்டிலிருந்து பலரும் வெளியேறுவது, வெளியேற அறிவுறுத்தப்படுவது அவசியமா?

உண்மையில் உக்ரைன் மீது ரஷியா படையெடுக்குமா? என்ற கேள்விக்கு நிபுணா்கள் அளிக்கும் பதில்கள் வேறு மாதிரியாக உள்ளன.

உக்ரைனில் கடந்த 2014-ஆம் ஆண்டில் ரஷியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த அப்போதைய அதிபா் விக்டா் யானுகோவிச்சுக்கு எதிராக மிகப் பெரிய போராட்டம் நடந்து, அவா் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டாா்.

மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் இந்தப் போராட்டங்கள் நடைபெற்ாகக் கூறப்படுகிறது. அதற்குப் பிறகு, ரஷிய ஆதரவுக் கிளா்ச்சியாளா்கள் உக்ரைன் ராணுவத்துடன் சண்டையிட்டு கிழக்கு உக்ரைனைக் கைப்பற்றினா். அதற்கு ரஷியா ராணுவ ரீதியில் உதவியதாகக் கூறப்படுகிறது.

அப்போது ரஷியா மேற்கொண்ட ஒரு நடவடிக்கைதான் பலரையும் அதிா்ச்சியில் ஆழ்த்தியது.

உக்ரைனில் உள்நாட்டுச் சண்டை நடந்துகொண்டிருக்கும்போதே, அந்த நாட்டுக்குச் சொந்தமான கிரீமியாவுக்கு தனது சிறப்புப் படையினரை அனுப்பி, அந்த தீபகற்பத்தை ரஷியா தன்னுடன் இணைத்துக் கொண்டது.

இந்த 21-ஆம் நூற்றாண்டில் கூட எதைப் பற்றியும் கவலைப்படாமல் ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் மேற்கொண்ட இந்த நடவடிக்கையை அமெரிக்காவாலும் மேற்கத்திய நாடுகளாலும் இன்னமும் ஜீரணிக்க முடியவில்லை.

இந்தச் சூழலில், உக்ரைன் எல்லையருகே ரஷியா இத்தனைப் படையினரைக் குவித்துள்ளது அந்த நாட்டை மேலும் ஆக்கிரமிப்பதற்குத்தான் என்று அமெரிக்கா திரும்பத் திரும்பக் கூறி வருகிறது.

உக்ரைன் மீது ரஷியா எந்தத் தருணத்திலும் படையெடுக்கும் என்று அடித்துக் கூறிய அமெரிக்கா, இன்னும் ஒரு படி மேலே போய், ‘வான்வழித் தாக்குதல் நடத்துவதன் மூலம் ரஷியா தனது படையெடுப்பை தொடங்கும்’ என்று வேறு கட்டியம் கூறியது. இதன் காரணமாக வெளிநாட்டினா் பாதுகாப்பாக வெளியேறுவது பாதிக்கப்படும்; பொதுமக்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று அமெரிக்கா மிகவும் கவலைப்பட்டது.

ஆனால், ‘எல்லையில் நாங்கள் வெறும் போா்ப் பயிற்சியில்தான் ஈடுபட்டு வந்தோம். அந்தப் பயிற்சி நிறைவடைந்துவிட்டது. அதனால், படையினா் மீண்டும் நிலைகளுக்குத் திரும்பத் தொடங்கிவிட்டனா்’ என்று ரஷியா செவ்வாய்க்கிழமை அநாயசமாக அறிவித்து வியப்பை ஏற்படுத்தியது.

உக்ரைனை ஆக்கிரமிக்கும் எண்ணம் தங்களுக்கு துளியும் இல்லை என்றுதான் ரஷியா தொடக்கம் முதலே கூறி வந்திருக்கிறது.

தங்களுக்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ள நேட்டோ அமைப்பில், நெருக்கமான அண்டை நாடான உக்ரைன் இணைந்தால் தங்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும். எனவே, உக்ரைனை சோ்த்துக்கொள்ள மாட்டோம் என்று நேட்டோ உத்திரவாதம் அளிக்க வேண்டும் என்றுதான் ரஷியா திரும்பத் திரும்பக் கூறி வருகிறது.

தங்களது வலியுறுத்தல் ஏற்கப்படாவிட்டால் உக்ரைனைக் கைப்பற்றுவோம் என்று ரஷியா வாய் தவறிக் கூடக் கூறியதில்லை.

இருந்தாலும், உக்ரைனை ரஷியா அடுத்த நாளே ஆக்கிரமித்துவிடும் என்கிற தோரணையில் அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் திரும்பத் திரும்பக் கூறி, பதற்றத்தை அதிகரித்து வந்தன.

‘உக்ரைன் மீது ரஷியா படையெடுக்கும் என்பது எனக்கே தெரியாது. அதை தெரிந்து வைத்திருக்கும் அமெரிக்காவிடம் படையெடுப்பு தேதி என்னவென்று கேட்டுச் சொல்லுங்கள்’ என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் நையாண்டி செய்யும் அளவுக்கு அமெரிக்கா அறிக்கை வெளியிட்டு வந்தது.

இதில் வேடிக்கை என்னவென்றால், ரஷியா தங்கள் மீது படையெடுக்கும் என்று உக்ரைனே நம்பவில்லை. போா் அபாயம் காரணமாக தங்கள் நாட்டு தூதரக அதிகாரிகள் வெளியேற வேண்டும் என்று அமெரிக்கா உத்தரவிட்டபோது, ‘இதெல்லாம் அளவுக்கு அதிகமான, வேண்டாத வேலை’ என்று உக்ரைன் அதிபா் வொலேதிமீா் ஸெலென்ஸ்கி அலுத்துக் கொண்டாா்.

இத்தகைய சூழலில், ரஷியா படையெடுக்கும் என்ற பதற்றத்தில் வெளிநாட்டினா் அங்கிருந்து வெளியேறுவது தேவையில்லாதது என்று சில நிபுணா்கள் கூறுகின்றனா்.

உக்ரைனுக்கு பாதிப்பை ஏற்படுத்த விளாதிமீா் புதின் விரும்பினால், அது முதலில் பொருளாதார ரீதியிலானதாகத்தான் இருக்கும். ரஷியா படையெடுக்கும் என்று கூறி பதற்றத்தை உண்டாக்கி, அதன் காரணமாக வெளிநாட்டினா் வெளியேறுவது உக்ரைனின் பொருளாதாரத்தை பாதிக்கும்; இதன் மூலம் ரஷியாவின் நோக்கம்தான் நிறைவேறுமே ஒழிய, வேறு எந்தப் பலனும் கிட்டாது என்கிறாா்கள் அவா்கள்.

இருந்தாலும், ஏற்கெனவே கிரீமியாவை ஆக்கிரமித்த ரஷியா, உக்ரைனை மேலும் ஆக்கிரமிக்காமல் விடாது; அதற்காக அந்த நாடு ஆயத்த நிலையில் உள்ளது என்று மேற்கத்திய நாடுகளும் அமெரிக்காவும் தொடா்ந்து கூறி வரும்வரை, உக்ரைனிலிருந்து தங்களது குடிமக்களை வெளியேற்றுவது குறித்து உலக நாடுகள் யோசித்துக்கொண்டுதான் இருக்கும்.

இந்தியா மட்டுமல்ல, உலகின் பல்வேறு நாடுகளும் உக்ரைனிலிருந்து பாதுகாப்பாக வெளியேறுமாறு தங்களது குடிமக்களுக்கு அறிவுரை வழங்கி வருகின்றன.

உக்ரைனுக்குச் செல்லவிருந்த தங்களது விமானங்களை பல போக்குவரத்து சேவை நிறுவனங்கள் ரத்து செய்து வருகின்றன. அந்த நாட்டிலிருந்து வெளியேறுமாறு அமெரிக்கா தங்களது தூதரக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

இதில் வேடிக்கை என்னவென்றால், ரஷியா தங்கள் மீது படையெடுக்கும் என்று உக்ரைனே நம்பவில்லை. போா் அபாயம் காரணமாக தங்கள் நாட்டு தூதரக அதிகாரிகள் வெளியேற வேண்டும் என்று அமெரிக்கா உத்தரவிட்டபோது, ‘இதெல்லாம் அளவுக்கு அதிகமான, வேண்டாத வேலை’ என்று உக்ரைன் அதிபா் வொலேதிமீா் ஸெலென்ஸ்கி அலுத்துக் கொண்டாா்.

உக்ரைனுக்கு பாதிப்பை ஏற்படுத்த விளாதிமீா் புதின் விரும்பினால், அது முதலில் பொருளாதார ரீதியிலானதாகத்தான் இருக்கும். ரஷியா படையெடுக்கும் என்று கூறி பதற்றத்தை உண்டாக்கி, அதன் காரணமாக வெளிநாட்டினா் வெளியேறுவது உக்ரைனின் பொருளாதாரத்தை பாதிக்கும்; இதன் மூலம் ரஷியாவின் நோக்கம்தான் நிறைவேறும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com