படைகளை திரும்பப் பெற்றதாக அறிவித்த ரஷியா...நம்ப மறுக்கும் அமெரிக்கா

உக்ரைன் எல்லை அருகே மேலும் 7,000 படை வீரர்களை ரஷியா குவித்துள்ளதை அமெரிக்க உறுதி செய்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

உக்ரைன் எல்லை அருகே படைகளை திரும்பபெற்றதாக ரஷியா அறிவித்துள்ளது பொய்யான தகவல் என அமெரிக்க அரசின் மூத்த அலுவலர் புதன்கிழமை தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர் இதுகுறித்து கூறுகையில், "நேற்று உக்ரைன் எல்லையில் இருந்து படைகளை வாபஸ் பெறுவதாக ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது. 

அந்த கூற்றுக்காக அவர்கள் இங்கும் உலகெங்கிலும் அதிக கவனத்தைப் பெற்றனர். ஆனால் அது பொய் என்று இப்போது எங்களுக்குத் தெரியும்" என்றார்.

படைகளை ரிஷிய திரும்பபெறவில்லை என்பதற்காக ஆதாரங்களை அந்த அலுவலர் வெளியிட மறுத்துவிட்டார். இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "ரஷியா உக்ரைனிய எல்லையில் 7,000 துருப்புக்களை அதிகரித்துள்ளனர். அவர்களில் பலர் சமீபத்தில் புதன்கிழமைதான் குவிக்கப்பட்டனர்" என்றார்.

படைகள் திரும்பபெறப்பட்டுள்ளதாகக் கூறிய ரஷிய பாதுகாப்புத்துறை அமைச்சகம், உக்ரைன் அருகே போர் பயிற்சிக்குப் பிறகு அதன் படைகள் பின்வாங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. மேலும் கிரிமியா தீபகற்பத்திலிருந்து படைகள் வெளியேறுவதைக் காட்டும் வகையில் விடியோவை வெளியிட்டது.

இதை மறுத்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், முக்கியமான துருப்புகளை எல்லை அருகே ரஷியா குவித்துள்ளதாக கூறியுள்ளார். 

சோவியத் யூனியன் கடந்த 1991-ஆம் ஆண்டில் சிதறியபோது, அதில் அங்கமாக இருந்த உக்ரைன் சுதந்திர நாடாக அறிவித்துக்கொண்டது. தனது எல்லையையொட்டி அமைந்துள்ள அந்த நாடு, சோவியத் யூனியனுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில் இணைந்தால் அது தங்களது பாதுகாப்புக்கு அது மிகப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று ரஷியா கருதுகிறது.

உக்ரைனை தங்களது அமைப்பில் இணைக்க மாட்டோம் என்று நேட்டோ உறுதிமொழி அளிக்க நேட்டோவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், உக்ரைன் எல்லையருகே ஏராளமான எண்ணிக்கையில் படையினரை ரஷியா குவித்துள்ளது.

அங்கு 1.3 லட்சத்துக்கு மேல் படையினரை ரஷியா குவித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துல்ளது. மேலும், உக்ரைன் மீது ரஷியா விரைவில் படையெடுக்கும் என்று அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் கூறி வருகின்றன.

இந்தச் சூழலில், எல்லைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த தங்களது படையினரின் ஒரு பகுதியினா் நிலைகளுக்குத் திரும்பத் தொடங்கியதாக ரஷியா அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com