உக்ரைன் போர்: ருமேனியா, ஹங்கேரி வழியாக இந்தியர்களை மீட்க நடவடிக்கை?

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ருமேனியா, ஹங்கேரி, போலந்து நாடுகளின் வழியே மீட்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
உக்ரைன் போர்: ருமேனியா, ஹங்கேரி வழியாக இந்தியர்களை மீட்க நடவடிக்கை?

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ருமேனியா, ஹங்கேரி, போலந்து நாடுகளின் வழியே மீட்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

நேட்டோ ராணுவ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷியா, உக்ரைன் மீது நேற்று போர் தொடுக்கத் தொடங்கியது. ரஷியா தாக்குதலில் உக்ரைன் நிலைகுலைந்துள்ளது. 

இந்நிலையில் உக்ரைனில் கல்வி மற்றும் வேலைக்காகச் சென்ற பிற நாட்டினரும் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க அந்தந்த நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. 

மத்திய அரசு சார்பிலும் தில்லியில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்கு உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்கள், பணியாளர்களை பாதுகாப்புடன் மீட்க வேண்டும் என்று பல தரப்பிலும் கோரிக்கை வலுத்து வருகிறது. 

இந்நிலையில், உக்ரைனின் அண்டை நாடுகளான ருமேனியா,  ஹங்கேரி நாடுகளின் வழியே இந்தியர்களை மீட்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உக்ரைனில் இருந்து தரைவழியாக ருமேனியா,  ஹங்கேரி நாடுகளுக்கு அழைத்துவரப்பட்டு அங்கிருந்து விமானம் மூலமாக தில்லி வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இதற்காக முதற்கட்டமாக இரண்டு விமானங்களை மத்திய அரசு, ருமேனியாவிற்கு அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com