உக்ரைன் விவகாரம்: இந்தியாவின் ஆதரவை பெற முயற்சிக்கும் அமெரிக்கா

உக்ரைன் மீது ரஷியா இரண்டாவது நாளாக போர் தொடுத்துள்ள நிலையில், இந்தியாவின் ஆதரவை பெறுவதற்காக அமெரிக்க பல்வேறு நிலைகளில் இந்திய தரப்பிடம் பேசிவருகிறது.
பைடனுடன் மோடி
பைடனுடன் மோடி

உக்ரைன் மீது ரஷியா படையெடுத்துள்ள நிலையில், இந்த பிரச்னை தொடர்பாக இந்தியாவுடன் அமெரிக்கா ஆலோசனை மேற்கொள்ளும் என அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

முன்னதாக, உக்ரைனிலிருந்து வரும் மிரட்டல்களுக்கு பதிலடியாக ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள ரஷிய படைகளுக்கு அந்நாட்டு அதிபர் விளாதிமீர் புதின் வியாழக்கிழமை உத்தரவிட்டார். ரஷியாவின் ராணுவ நடவடிக்கையில் மற்ற நாடுகள் தலையிட்டால் இதுவரை பார்த்திராத பின்வுளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்திருந்தார்.

இதுகுறித்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய பைடன், "உக்ரைன் நெருக்கடி குறித்து இந்தியாவுடன் ஆலோசனை நடத்த உள்ளோம். நாங்கள் இதை முழுமையாக தீர்க்கவில்லை" என்றார். உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்காவின் கருத்துக்கு இந்தியா முழுமையாக உடன்படுகிறதா என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பைடன் இப்படி பதில் அளித்திருந்தார்.

உக்ரைன் விவகாரத்தை பொறுத்தவரை, இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் மாற்று கருத்து நிலவுவதை புரிந்துகொள்ள முடிகிறது. குறிப்பாக, ரஷியாவுடன் வரலாற்று ரீதியாகவே நீண்ட காலமாக இந்தியா நல்ல உறவை பேணிவருகிறது. அதே சமயத்தில், அமெரிக்கா உடனான உறவு கடந்த 20 ஆண்டுகளில் பெரும் வளர்த்தி அடைந்துள்ளது.

இதற்கிடையே, உக்ரைன் மீது ரஷியா இரண்டாவது நாளாக போர் தொடுத்துள்ள நிலையில், இந்தியாவின் ஆதரவை பெறுவதற்காக அமெரிக்க பல்வேறு நிலைகளில் இந்திய தரப்பிடம் பேசிவருகிறது. வெள்ளை மாளிகை, வெளியுறவுத்துறை அமைச்சகம், தேசிய பாதுகாப்பு கவுன்சில் என பல்வேறு நிலைகளில் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது.

அதிகாரப்பூர்வமற்ற செய்தியாளர் சந்திப்பில் உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலைபாடு குறித்து பேசுவதற்கு அமெரிக்க மூத்த அலுவலர் மறுப்பு தெரிவித்துவிட்டார். அதேபோல, உக்ரைன் விவகாரகத்தில் அமெரிக்க மூத்த அலுவலர்கள் சக இந்திய அலுவலர்களிடம் இதுகுறித்து அதிருப்தி தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com