போரைச் சமாளிக்க உக்ரைன் ராணுவத்திற்கு பிட்காயின்கள் நன்கொடை

ரஷியப் படைகள் சுற்றி வளைத்துத் தாக்குதல் நடத்தும் நிலையில் போரைச் சமாளிக்க உக்ரைன் ராணுவத்திற்கு நன்கொடையாளர்கள் பிட்காயினை வழங்கி வருகிறார்கள்.
உக்ரைன் தலைநகர் கிவ்வில் நுழைந்த ரஷியப் படைகள்
உக்ரைன் தலைநகர் கிவ்வில் நுழைந்த ரஷியப் படைகள்

ரஷியப் படைகள் சுற்றி வளைத்துத் தாக்குதல் நடத்தும் நிலையில் போரைச் சமாளிக்க உக்ரைன் ராணுவத்திற்கு நன்கொடையாளர்கள் பிட்காயினை வழங்கி வருகிறார்கள்.

நேட்டோ ராணுவ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷியா, உக்ரைன் எல்லையில் சுமாா் 1.50 லட்சம் ராணுவ வீரா்களை குவித்ததால் எந்த நேரமும் போர்ச் சூழல் உருவாகும் அபாயம் இருந்து வந்தது. 

அதன்படி, உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைளை மேற்கொள்ள ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் வியாழக்கிழமை உத்தரவிட்டதை அடுத்து, ரஷியப் படைகள், உக்ரைனில் போர் தொடுக்கத் தொடங்கியுள்ளன. நேற்று தலைநகர் கீவ் வரை ரஷியப் படைகள் முன்னேறியுள்ளன. அங்குள்ள செர்னோபில் அணு உலையையும் ரஷியப் படை கைப்பற்றியுள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. 

இதில் ரஷியா நடத்திய முதல்நாள் தாக்குதலில் 137 உக்ரைன் ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளதாக உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தகவல் தெரிவித்ததுடன் 316 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறினார். 

இந்நிலையில், ரஷியா உடனான போரைச் சமாளிக்க உக்ரைன் ராணுவத்தினருக்கு நன்கொடையாளர்கள் சிலர் கிரிப்டோகரன்சிகளில் ஒன்றான பிட்காயினை வழங்கி வருகிறார்கள்.

இதுவரை 4 லட்சம் அமெரிக்க டாலர்கள் (ரூ.3 கோடி)  நன்கொடை கொடுக்கப்பட்டுள்ளதாக கிரிப்டோகரன்சி ஆய்வுகளை மேற்கொள்ளும் எலிப்டிக் நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் உக்ரைனுக்கு ஆதரவானவர்கள் சிலரும் உதவிகளைச் செய்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com