உக்ரைனிலிருந்து வெளியேறிய 1 லட்சம் பேர்

ரஷிய படையெடுப்பைத் தொடர்ந்து, உக்ரைனிலிருந்து சுமார் 1 லட்சம் பேர் எல்லைத் தாண்டி போலந்துக்கு குடிபெயர்ந்திருப்பதாக அந்நாட்டு உள்துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உக்ரைனிலிருந்து வெளியேறிய 1 லட்சம் பேர்
உக்ரைனிலிருந்து வெளியேறிய 1 லட்சம் பேர்


வார்சா: ரஷிய படையெடுப்பைத் தொடர்ந்து, உக்ரைனிலிருந்து சுமார் 1 லட்சம் பேர் எல்லைத் தாண்டி போலந்துக்கு குடிபெயர்ந்திருப்பதாக அந்நாட்டு உள்துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் கடந்த சில நாள்களாக போர் வெடித்து வரும் நிலையில், எல்லைக் கடந்து போலந்துக்கு சுமார் 1 லட்சம் பேர் வந்திருப்பதாகவும், போலந்து நாட்டின் எல்லைக் கிராமங்களில் எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் இதனைத் தெரிவிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க.. ஸ்நேக் தீவு: மண்டியிடாமல் வீரம் காத்த 13 உக்ரைன் வீரர்கள்

போலந்துக்குள் வந்திருக்கும் 90 சதவீத மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்கியுள்ளனர். சிலர் போலந்து நாட்டிலிருக்கும் உறவினர்கள், நண்பர்களின் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். சிலர் மட்டுமே எல்லைகளில் அமைக்கப்பட்டிருக்கும் தங்குமிடங்களில் இடங்கள் கோரியிருக்கிறார்கள்.

தற்போதைக்கு, உக்ரைன் மக்களுக்கு உணவு மற்றும் மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை வரை, உக்ரைனிலிருந்து போலந்துக்கு வந்தவர்கள் எண்ணிக்கை 50 ஆயிரமாக இருந்த நிலையில், ஒரே நாளில் அது 1 லட்சமாக அதிகரித்துள்ளது.

போலந்து மட்டுமல்லாமல், உக்ரைனின் எல்லை நாடுகளான ஹங்கேரி, ஸ்லோவாகியா, ரோமானியா உள்ளிட்ட நாடுகளுக்கு இடம்பெயருவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com