உக்ரைனில் இருந்து 1.5 லட்சம் பேர் அண்டை நாடுகளில் தஞ்சம்: ஐ.நா அகதிகள் ஆணையம் தகவல்

உக்ரைன் மீது ரஷியப் படைகள் நான்காவது நாளாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைனில் இருந்து இதுவரை 1.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அங்கிருந்து வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளதாக ஐ.நாவின் அகதிகள் ஆணையம் தெரிவித்துள்ளது. 
உக்ரைனில் இருந்து 1.5 லட்சம் பேர் அண்டை நாடுகளில் தஞ்சம்: ஐ.நா அகதிகள் ஆணையம் தகவல்


உக்ரைன் மீது ரஷியப் படைகள் நான்காவது நாளாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைனில் இருந்து இதுவரை 1.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அங்கிருந்து வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளதாக ஐ.நாவின் அகதிகள் ஆணையம் தெரிவித்துள்ளது. 

“தற்போதைய நிலவரப்படி கிட்டத்தட்ட 1,50,000 பேர் சர்வதேச எல்லைகளைக் கடந்துள்ளனர். இது மேலும் அதிகரிக்கலாம், ஒவ்வொரு நிமிடமும் நிலைமை மாறிக்கொண்டே இருக்கிறது, ”என்று ஐ.நாவின் அகதிகள் ஆணைய உயர் ஆணையரின் செய்தித் தொடர்பாளர் ஷாபியா மாண்டூ கூறினார். இந்த நிலை "ஒவ்வொரு நிமிடமும் நிலைமை மாறிக்கொண்டே இருக்கிறது. 

உக்ரைன் தலைநகரை கைப்பற்றி தங்கள் தேசத்தின் கொடியை நாட்டுவதற்கு ரஷியப் படைகள் தொடர்ந்து பல்முனைத் தாக்குதலை நடத்தி வருவதால் உக்ரைனியர்கள் அங்கிருந்து வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். மேலும் நிலைமை மோசமடைந்தால், நான்கு மில்லியன் உக்ரேனியர்கள் வெளியேறக்கூடும் என்று கூறினார்.

பெரும்பாலானோர் அண்டை நாடான போலந்து, மால்டோவா, ஹங்கேரி, ருமேனியா மற்றும் சுலோவாக்கியா மற்றும் பெலாரஸில் தஞ்சம் அடைந்துள்ளதாக மாண்டூ கூறினார். 

நாடு வாரியாக தஞ்சம் அடைந்தவர்களின் எண்ணிக்கை விவரங்கள் உடனடியாக தெரியவில்லை, ஆனால் இதுவரை அதிக எண்ணிக்கையிலானவர்கள் போலந்திற்கு சென்றுள்ளனர், ஏற்கனவே, அங்கு சுமார் 20 லட்சம் உக்ரேனியர்கள் வேலைகளுக்கான குடியேறியுள்ளனர்.

கடந்த 48 மணி நேரத்தில் ஒரு லடசத்துக்கும் மேற்பட்ட உக்ரைனியர்கள் எல்லையைக் கடந்துள்ளதாக போலந்து அரசு சனிக்கிழமை தெரிவித்தது.

உக்ரைனில் இருந்து அகதிகளாக வருவோருக்கு தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும், உக்ரைனில் இருந்து வருபவர்கள் விசா இன்றி வரலாம் என அயர்லாந்து அறிவித்துள்ளது. 

இதேபோன்று பல ஐரோப்பிய நாடுகள் உக்ரைனில் இருந்து வருபவர்களுக்கு அடைக்கலம் தர தயாராகி வருவதாகவும், தற்போதைய சூழ்நிலையில், உக்ரைனியர்கள் சுமார் 140 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம் என கூறப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com