அமெரிக்கா: நாளொன்றுக்கு 4 லட்சம் பேர் கரோனாவால் பாதிப்பு, மருத்துவர்கள் திணறல்

அமெரிக்காவில் கரோனா உறுதி செய்யப்படுவோரின் தினசரி எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

உலகம் முழுவதும் கரோனா தாக்கம் குறைய ஆரம்பித்த நிலையில் ஒமைக்ரான் தொற்று பரவத் தொடங்கியதும் மீண்டும் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உச்சத்தை அடைந்து வருகிறது.

தற்போது, அமெரிக்காவில் கடந்த 7 நாள்களின் சராசரி கரோனா பாதிப்பின் எண்ணிக்கை 4.13 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இதனால், அதிக வேகமாகப் பரவி வரும் கரோனா தொற்றால் மருத்துவர்கள் திணறி வருகிறார்கள். 

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. முன்னதாக, கடந்த சனிக்கிழமை 5 லட்சம் பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது. இது, நாட்டில் இதுவரை இல்லாத அதிகபட்ச தினசரி பாதிப்பு எண்ணிக்கையாகும். இத்துடன், ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,55,52,823-ஆக உயா்ந்துள்ளது.

இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் 1,500 க்கும் அதிகமான கரோனா நோயாளிகள் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தனா். இத்துடன், அந்த நோய்க்கு பலியானவா்களின் எண்ணிக்கை 8,48,745-ஆக உயா்ந்துள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com