"அவர்களை ஒதுக்கவே விரும்புகிறேன்" யாரை பற்றி சொல்கிறார் பிரான்ஸ் அதிபர்

"தடுப்பூசி செலுத்தாதவர்களே ஒதுக்கவே விரும்புகிறேன். இறுதிவரை, அதை தொடர்ந்து செய்யவுள்ளோம். அதுவே எங்களது வியூகம்" என பிரான்ஸ் அதிபர் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் அதிபர் மேக்ரான்
பிரான்ஸ் அதிபர் மேக்ரான்

ஐரோப்பிய நாடுகளில் கரோனா பரவல் மீண்டும் தீவிரமடைந்துவருகிறது. குறிப்பாக, அதிக பரவல்தன்மை கொண்ட ஒமைக்ரான் காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது.

பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி விநியோகம் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், பூஸ்டர் பணியை தொடங்க பல்வேறு நீாடுகள் முனைப்பு காட்டிவருகின்றன.

அதேபோல, ஒரு டோஸ் தடுப்பூசி கூட செலுத்தி கொள்ளாதவர்களின் எண்ணிக்கையும் குறிப்பிட தகுந்த அளவில் உள்ளது. இந்நிலையில், தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் குறித்து பிரான்ஸ் அதிபர் மேக்ரான் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியுள்ளார். 

அதிபர் நடைபெறுவதற்கு 4 மாதங்களே உள்ள நிலையில், இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. செவ்வாய்கிழமை அன்று பிரபல நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில், "தடுப்பூசி செலுத்தாதவர்களே ஒதுக்கவே விரும்புகிறேன். இறுதிவரை, அதை தொடர்ந்து செய்யவுள்ளோம். அதுவே எங்களது வியூகம்" என்றார்.

கடந்தாண்டு கூட, தடுப்பூசி செலுத்தி கொள்ளாவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. விடுதி, தேநீர் கடைகள் உள்ளிட்ட இடங்களுக்கு தடுப்பூசி அல்லது பிடிஆர் சோதனை சான்றிதழ் வைத்துள்ளவர்கள் மட்டுமே செல்ல முடியும் என உத்தரவிடப்பட்டது. இதன் மூலம், சுகாதார நுழைவுச்சீட்டு கட்டாயமாக்கப்பட்டது.

இதுகுறித்து நேர்காணலின்போது விவரித்த மேக்ரான், "தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களை சிறைக்கு அனுப்ப மாட்டேன். தடுப்பூசி செலுத்தி கொள்ளும்படி கட்டாயப்படுத்த மாட்டேன். ஆனால், ஜனவரி 15ஆம் தேதி முதல் உங்களால் உணவகங்களுக்கு செல்ல முடியாது. தேநீர் கடைகளுக்கு செல்ல முடியாது. திரையரங்குகளுக்கு செல்ல முடியாது" என்றார்.

இதேபோல, முன்பு ஒரு முறை, தனது கருத்துகளால் மேக்ரான் விமர்சிக்கப்பட்டார். பல நேரங்களில், தான் பேசிய கருத்துக்கு மேர்கான் வருத்தமும் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com