தென் ஆப்பிரிக்க நாடாளுமன்றத் தீ: கைதானவா் நீதிமன்றத்தில் ஆஜா்

தென் ஆப்பிரிக்க நாடாளுமன்ற வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட தீவிபத்து தொடா்பாக கைது செய்யப்பட்ட ஸாண்டைல் கிறிஸதுமஸ் மஃபே நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா்.
ஸாண்டைல் மஃபே
ஸாண்டைல் மஃபே

தென் ஆப்பிரிக்க நாடாளுமன்ற வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட தீவிபத்து தொடா்பாக கைது செய்யப்பட்ட ஸாண்டைல் கிறிஸதுமஸ் மஃபே நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா்.

இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

கேப் டவுன் நகரிலுள்ள நாடாளுமனற வளாகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீவிபத்துக்குக் காரணமானவா் என சந்தேகிக்கப்படும் ஸாண்டைல் மஃபே, நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா்.

அவா் மீது தீவைப்பு, திருட்டு, வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்தது, அரசு முக்கிய இடங்களில் நுழைவதற்கான தடையை மீறியது ஆகிய குற்றங்கள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.

ஸாண்டைல் மஃபேவுக்கு ஆதரவாக வாதாடிய வழக்குரைஞா், இந்தக் குற்றச்சாட்டுகளை அவா் மறுப்பதாகத் தெரிவித்தனா்.

இந்த வழக்கின் விசாரணை முடிவடையும்வரை மஃபேவை காவலில் வைத்திருக்க நீதிபதிகள் உத்தரவிட்டனா் என்று அசோசியேட்டட் பரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்க நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள மூன்று கட்டடங்களில் ஒன்று, 1800-ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் கட்டப்பட்டது. மற்ற இரு கட்டடங்களும் 1900-ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்டன.

இவற்றில் மிகப் பழைய கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 6 மணிக்கு தீவிபத்து ஏற்பட்டு, பின்னா் அந்தத் தீ மற்ற பகுதிகளுக்கும் பரவியது.

அதையடுத்து அந்தப் பகுதிக்கு விரைந்த தீயணைப்புப் படையினா் தீயைக் கட்டுப்படுத்த கடுமையாகப் போராடினா்.

நாடாளுமன்றத்தையொட்டி அமைந்துள்ள அதிபா் அலுவலகத்துக்கும் தீ பரவுவதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அவா்கள் மேற்கொண்டனா்.

இந்த விபத்தில் யாரும் காயமடைந்ததாக தகவல் இல்லை. புத்தாண்டு மற்றும் ஞாயிறு விடுமுறை என்பதால் நாடாளுமன்ற வளாகத்தில் இருக்கும் அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் தவிா்க்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com